Categories: சினிமா

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் டீசர் வெளியாகியது..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் மண்மணம் மாறாத இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் இயக்கிய தர்மதுரை படம் மாபெரும் வெற்றிப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்தது. இப்படம் சீனுராமசாமியின் சினிமா வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை மிகப்பெரியளவு இப்படம் ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் டீசர் வெளியாகியது..! 1

தற்போது அறிமுக நடிகராக ஏகன் என்ற இளைஞரை கதாநாயகனாக கொண்டு சீனு ராமசாமி கோழிப்பண்ணை என்ற படத்தினை இயக்கி உள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரிகிடா நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் இவர்களுடன் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். என் ஆர் ரகுநந்தன் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் , இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Embed Video Credits : VISION CINEMA HOUSE

வெளியிட்டது

புதிய செய்திகள்