விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. குடும்பத்தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. நாளுக்கு நாள் கதையின் சுவாரஸ்யத்தை அதிகரித்து வரும் இயக்குனரால் தொடருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து வருகின்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் , முத்து மீனா , ரோகிணி மனோஜ் என குடும்பமாக சிறந்த ஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதில் ஜோடிகளுக்கு திருப்திகரமான வாழ்க்கை வாழ என்ன வேண்டும் என ஆலோசித்து சொல்ல சொல்லுகின்றனர். ஆனால் மனோஜ் கேமிரா முன் நின்று பொய் சொல்லுவோம் என மனைவியிடம் கூறுகிறார்.

இதனை அனைவரின் முன்பும் குறும்படமாக போட்டு காண்பிக்கின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. மனோஜ் மாட்டியது அனைவரிடமும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION