Categories: சினிமா

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

வெளியிட்டது

மண் மனம் மாறாமல் படம் எடுப்பதில் வல்லவர் தான் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இவர். இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. இதனை தொடர்ந்து நல்ல கருத்தான படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை படம் ரசிகர்களிடம் தற்போதுவரை நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

தற்போது அறிமுக நடிகராக ஏகன் என்ற இளைஞரை கதாநாயகனாக கொண்டு சீனு ராமசாமி கோழிப்பண்ணை என்ற படத்தினை இயக்கி உள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரிகிடா நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் இவர்களுடன் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். என் ஆர் ரகுநந்தன் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : DIVO MUSIC

வெளியிட்டது

புதிய செய்திகள்