வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்து 200 குடும்பங்களுக்கு உதவி செய்த KPY பாலா.!

வெளியிட்டது

சின்னத்திரை நடிகர் KPY பாலா தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் எடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்ளுக்கு உதவி செய்திருக்கிறார். அவரின் இந்த காரியம் தற்போது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையை புரட்டி போட்டு இருக்கிறது மிக்ஜாம் புயல். புயல் கரையைக் கடந்து விட்ட பின்னரும் வெள்ள சேத பாதிப்புகளால் சென்னை தத்தளித்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பலரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பலரை படகு மூலமாக பாதுகாப்பான இடங்களுக்கு அரசு அழைத்துச் செல்கிறது. உணவு, தண்ணீர், பால் போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாமல் கூட பலர் தவித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்து 200 குடும்பங்களுக்கு உதவி செய்த KPY பாலா.! 1
விமானம், ரயில், போக்குவரத்து போன்ற பல போக்குவரத்து தொடர்புகளும் சென்னைக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், நடிகைகள், சின்னத்திரை நடிகர்கள் என பலரும் நேரில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் பாலாவும் தன்னால் முடிந்த உதவியை சுமார் 200 குடும்பங்களுக்கு செய்திருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்த பாலா மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் சம்பாதிக்கும் பணம் அனைத்தையுமே மக்களுக்கு திருப்பி செய்து கொண்டிருக்கிறார். 30 குழந்தைகளைப் படிக்க வைக்கும் அவர், ஒரு முதியோர் இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார். தொடர்ந்து மலை வாழ் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கியும் வருகிறார் பாலா.


இந்த நிலையில் புயலால் பாதித்த 200 குடும்பங்களுக்கு ₹1000 வீதம் ரூ.2 லட்சம் ரூபாயை வழங்கி இருக்கிறார். இது குறித்து பேட்டி ஒன்றை அளித்த அவர், “தன்னை வாழ வைத்த சென்னைக்கு தன்னால் முடிந்த ஒரு சிறு உதவியை செய்ய நினைக்கிறேன். 2015ல் இதே போல வெள்ளம் வந்தபோது தன்னிடம் காசு இல்லை, ஆனால் இப்போது என் வங்கிக்கணக்கில் இருந்த இரண்டே கால் லட்ச ரூபாயை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாயை வழங்கியிருக்கிறேன்” என்று கூறினார். அவரின் இந்த மனிதநேயமிக்க செயல் பலரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: ABP Nadu

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்