பள்ளி சென்று திரும்பும் தர்ஷினியை கடத்த முயன்ற ஜான்சி ராணி, கரிகாலன்.! ப்ரோமோ இதோ.!

‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் தர்ஷினி பள்ளியிலிருந்து வரும் சமயத்தில் ஜான்சி ராணியும், அவரது மகனும் இணைந்து அவரை கடத்திக் கொண்டு செல்ல திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சரியாக அந்த சமயம் பார்த்து தர்ஷன் வருகிறார் வந்து தர்ஷினியை காப்பாற்றி அழைத்து செல்கிறார். நிலைமை ஒருபுறம் இப்படி இருக்க மறுபுறமும் வீட்டில் ஆதிரை போலீசை அழைத்துக்கொண்டு வந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் நடந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் ஜனனிதான் காரணம் என்று சொல்லி விசாலாட்சி பார்வதியை திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி சென்று திரும்பும் தர்ஷினியை கடத்த முயன்ற ஜான்சி ராணி, கரிகாலன்.! ப்ரோமோ இதோ.! 1
‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது ஆதிரை தனக்கு கரிகாலனுடன் வாழ பிடிக்கவில்லை என்று சொல்லி அருணின் வீட்டிற்க்கே சென்று விடுகிறார். சாருபாலாவும் ஆதிரையை அரவணைத்துக் கொள்கிறார். இந்த நிலையில் அருணன் விபத்திற்கு காரணமானவர்கள் தன்னுடைய அண்ணன்கள் தான் என்று சொல்லி போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதை விசாரிக்க போலீசார் தற்போது குணசேகரனின் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களிடம் கதிர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் தர்ஷினி பள்ளியில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். அவரை வழிமறிக்கும் ஜான்சி ராணி இவரை தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டியது தான் என சொல்லி அவரை கடத்த முயன்று கொண்டிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ரௌடிகளிடம் இருந்து தப்பிக்க தர்ஷினி எடுத்த இறுதி முடிவு.? தர்ஷினி தப்பிப்பாரா? 'எதிர்நீச்சல்' ப்ரோமோ

பள்ளி சென்று திரும்பும் தர்ஷினியை கடத்த முயன்ற ஜான்சி ராணி, கரிகாலன்.! ப்ரோமோ இதோ.! 3
அப்போது அங்கு வரும் தர்ஷன் தர்ஷினியை காப்பாற்றி அழைத்துச் செல்கிறார். மறுபுறம் வீட்டில் பார்வதியை பார்த்து, “இங்கு நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் உன் மகள் தான் காரணம்” என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது சக்தி ஜனனி திருப்பி இந்த வீட்டிற்கு வரவேண்டும் என்று அடம் பிடித்தது உன் மூத்த மகன்தான் என்று சொல்லி அவரது வாயை மூடுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun Tv

விளம்பரம்

Leave a Comment