பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 95 நாட்களை நிறைவு செய்து விட்டது. 96 வது நாளான இன்று ரூ.16 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பூர்ணிமா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. பூர்ணிமாவின் இந்த முடிவிற்கு பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக வலம் வந்தவர்கள் மாயா மற்றும் பூர்ணிமா. இவர்கள் இருவரின் நட்பு மற்றவர்களின் விளையாட்டை பாதிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் பிரதிப் வெளியேற்றத்திற்கு பின்னர் பிக் பாஸ் சீசன் 7ஐ இவ்வளவு தூரம் சுவாரஸ்யமாக மாற்றியதற்கு மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் ஒரு வகையில் காரணமாக இருந்தனர். எனவே இவர்கள் இருவரையும் வெளியேற்ற பிக் பாஸ் விரும்பவில்லை. இருவரும் கடைசி வாரம் வரை போட்டியாளர்களாக நீடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு லட்சத்தில் ஆரம்பித்து தற்போது ரூ.16 லட்சம் வரை பணம் உயர்ந்து இருக்கிறது. இன்றைக்கு வெளியாகியிருக்கும் முதல் ப்ரோமோவில் பணம் வந்த உடனேயே தான் இதை எடுத்துக் கொண்டு செல்வதாக பூர்ணிமா ஹவுஸ்மேட்ஸிடம் கூறுகிறார்.

மேலும், “நான் உங்களில் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்” என்று சொல்லி அனைவரும் முன்னிலையிலும் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். பூர்ணிமாவின் இந்த முடிவை பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் பாராட்டு வருகின்றனர். பூர்ணிமா எடுத்த ரூ.16 லட்சம் போக மீதம் ரூ.34 லட்சம் மட்டுமே வெற்றியாளருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Vijay Television