நண்பர்கள் வீட்டிற்கு சென்று நோன்பு திறந்த அறந்தாங்கி நிஷா..! செம்ம சூப்பரான ஒரு வீடியோ.!

அறந்தாங்கி நிஷா தற்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நோன்பு திறக்கும் வீடியோவை ஒரு Vlog வீடியோ போல வெளியிட்டு இருக்கிறார். செம காமெடியாக இருக்கும் அந்த வீடியோ தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்திருக்கிறது. அறந்தாங்கியில் பிறந்து வளர்ந்த நிஷா, பட்டிமன்ற பேச்சாளராக ஆரம்பத்தில் தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் வீட்டில் உள்ளவர்களை கலாய்க்கும் திறமையும் டைமிங் காமெடி செய்யும் திறமை இருந்ததால், கணவராலும் மாமியாராலும் அவர் ஊக்கம் கொடுக்கப்பட்டு திரைத்துறைக்கு செல்லும் ஆர்வத்தை வளர்த்தார். அதன் காரணமாக விஜய் தொலைக்காட்சிக்கு சென்ற அவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பொதுவாகவே சின்னத்திரை வெள்ளித்திரை ஆகிய இரண்டிலும் பெண் காமெடியாளர்கள் மிகக் குறைவு. அதேபோலத்தான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் பெண் போட்டியாளர்கள் இல்லாத சூழ்நிலையில் தனி ஒரு பெண்ணாக இருந்து காமெடி செய்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் வீட்டிற்கு சென்று நோன்பு திறந்த அறந்தாங்கி நிஷா..! செம்ம சூப்பரான ஒரு வீடியோ.! 1
அறந்தாங்கி நிஷாவின் காமெடி திறமை பலரையும் ஈர்த்தது. அவர் பழனியுடன் இணைந்து செய்த காமெடிகள் மிகப் பிரபலமானது. தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்த அவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 4 இன் போட்டியாளராக கலந்து கொண்டார் அறந்தாங்கி நிஷா. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நிஷா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் சமீபத்தில் கூட திருச்சியில் ஒரு வீடு ஒன்றை கட்டி அந்த வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சிகளை தொகுப்பாகவும் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று அவர் ஒரு வீடியோவை தனது youtube சேனலில் பகிர்ந்து இருக்கிறார். கருப்பு ரோஜா என யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் அறந்தாங்கி நிஷா தற்போது ரம்ஜான் நோன்பு திறக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுவது ரம்ஜான் மாதமாகும். இந்த மாதத்தில் ரம்ஜான் தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே நோன்பு தொடங்குவது வழக்கமாக இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  இது Unfair Eviction.! பிக்பாஸ் நியாமான ஷோவே கிடையாது.! பிக்பாஸை வெளுத்து வாங்கிய வனிதா.!

நண்பர்கள் வீட்டிற்கு சென்று நோன்பு திறந்த அறந்தாங்கி நிஷா..! செம்ம சூப்பரான ஒரு வீடியோ.! 3
அதிகாலை நோன்பு வைக்கத் தொடங்கினால் மாலை வரை பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் கடுமையான விரதத்தை இஸ்லாமியர்கள் இருந்து வருவது வழக்கம். ஆறு மணிக்கு மேல் நோன்பு திறந்துவிட்டு பள்ளிவாசலில் தரும் நோன்பு கஞ்சி உடன் விரதத்தை முடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்போது வீட்டில் செய்யும் உணவுகள், பலகாரங்கள், வடை, சர்பத், அகர் அகர் என்று பல உணவுகளுடன் நோன்பு திறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இஸ்லாமியர்கள். அதுபோலத்தான் அறந்தாங்கி நிஷா தற்போது தனது நண்பர்களுடன் இணைந்து நோன்பு கஞ்சி குடித்து விரதத்தை முடிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு முன்பாக சர்ப்பச் செய்வது, அகர் அகர் செய்வது, வடை சுடுவது என்று காமெடியான ஒரு Vlog வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது youtube டிரெண்டிங்கில் 14வது இடத்தை பிடித்திருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Karuppu Roja

விளம்பரம்

Leave a Comment