முன்பெல்லாம் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே அதில் சுவாரஸ்யமும் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்திருக்கும். ஆனால் தற்போது நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆட்களை கூட்டி வந்து அமர வைத்துக் கொண்டு பிராங்க் என்கிற பெயரில் பார்ப்பவர்களையும் முகம் சுளிக்க வைக்கின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் இதுபோல பார்ப்பவர்களை கோபப்படுத்தும் விதத்தில் பிராங்க்குளை செய்து வருகின்றனர். ஒருமுறை இருமுறை என்றால் மக்கள் ஏமாறுவார்கள் ஆனால் தொடர்ந்து பிராங்க் பிராங்க் என்று சொல்லி ஒரு நிகழ்ச்சியின் சுவாரசியத்தையே குறைத்து விடுகின்றனர். டிஆர்பி ரேட்டிங்கிற்காக இதுபோல அதிரடியான ப்ரோமக்களை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் ஒரு பிராங்க் ஒன்று நடந்திருக்கிறது. இதை பார்த்த ரேஷ்மா கோபத்தில் கத்துகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரேஷ்மாவின் இந்த கோபமும் பிராங்காக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டுவதற்கு தரமான நிகழ்ச்சிகளை வழங்காமல், நிகழ்ச்சிக்கு நடுவே ஏதாவது பிராங் செய்து அதை ப்ரோமோவாக வெளியிட்டு நிகழ்ச்சியை பார்க்க வைப்பதெல்லாம் ஒரு ஸ்டேடர்ஜியாக தற்போது நடந்து கொண்டிருக்கிறது. கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ரேஷ்மா, மதுரை முத்து, தாடி பாலாஜி மற்றும் ஸ்ருதிஹா ஆகியோர் இருக்கின்றனர். அறந்தாங்கி நிஷா மற்றும் KPY பாலா ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸில் இருந்து அமுதவாணன், ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் வந்துள்ளனர். தனலட்சுமி அறந்தாங்கி நிஷாவிடம் பிராங்க் ஒன்றை செய்து கொண்டிருக்கிறார். நிஷாவும் தனலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இறுதியில் இது பிராங்க் என்று பாலா போட்டு உடைத்து விடுகிறார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரேஷ்மா கடுப்பாகி, சும்மா நிறுத்துங்கயா எப்ப பாத்தாலும் பிராங்க் பிராங்க் என்று எனக்கு ரொம்ப இரிட்டேட் ஆகுது என்று சொல்லி கோபத்தில் கத்துகிறார். அவரை சமாதானம் செய்ய முயற்சிக்கும் மதுரை முத்துவின் கைகளை தள்ளிவிட்டு மைக்கை ஆஃப் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறுகிறார் ரேஷ்மா. ஆனால் இதுவும் பிராங்காக தான் இருக்க கூடும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ப்ராங்க்கிற்கு உண்டான மரியாதையை உங்களால் போச்சு என்று சொல்லியும் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும். ! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television