ஸ்ருதிகா போலவே பேசி மிமிக்கிரி செய்து மரணமாக கலாய்த்து தள்ளிய லியோனி.! செம்ம காமெடி.!

வெளியிட்டது

கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்த லியோனி தற்போது ஸ்ருதிகா போலவே செய்து காட்டி அவரை பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார். மேலும் ஸ்ருதிகாவிடம் கொஞ்சம் நேரம் பேசினால் நானும் அந்த பெண் போல மாறிவிடுவேன் என்றும் கலாய்த்து தள்ளியிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். பல நல்ல கலைஞர்களை உருவாக்கி இருக்கும் விஜய் டிவி, பல லட்சம் ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. ஆரம்பத்தில் நாடகங்கள் குறைவாகவும் ரியாலிட்டி ஷோக்களை மட்டுமே வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த டிவி, தற்போது பல நெடுந் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த தொடர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது. விஜய் டிவியிலிருந்து தற்போது சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் வெள்ளி திரையில் நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பலர் காமெடியிலும் கலக்கி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதிகா போலவே பேசி மிமிக்கிரி செய்து மரணமாக கலாய்த்து தள்ளிய லியோனி.! செம்ம காமெடி.! 1

இதில் குறிப்பிட தகுந்த நிகழ்ச்சியாக இருப்பது கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சி மூலம் பல காமெடி கலைஞர்கள் உருவாகி இருக்கிறார்கள். குறிப்பாக புகழ், பாலா, சரத், குரேஷி, ராமர், தங்கதுரை, நாஞ்சில் விஜயன் போன்ற பல கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து உருவாகியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் படங்களிலும் நடித்திருக்கின்றனர். குறிப்பாக புகழ் அஜித் மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது அவர் ஹீரோவாக மிஸ்டர் ஜு என்கிற படத்திலும் நடித்து வருகிறார். பாலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படிப்பட்ட பல கலைஞர்களை உருவாக்கிய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் நடுவர்களாக ஸ்ருதிஹா, மதுரை முத்து, தாடி பாலாஜி, பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை அறந்தாங்கி நிஷாவுடன் இணைந்து கே பி ஒய் பாலா தொகுத்து வழங்கி வருகிறார். வார வாரம் யாராவது ஒரு சிறப்பு விருந்தினர்களை அழைத்து நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் திண்டுக்கல் லியோனி மற்றும் பாக்யராஜை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இருக்கின்றனர். அங்கு வந்த லியோனியிடம் ஸ்ருதிகா எனக்கு ஒரு பாட்டு சொல்லி கொடுங்கள் என்று சொல்கிறார். ஸ்ருதிகாவின் சேட்டைகளை பார்த்த லியோனி இன்னும் கொஞ்சம் நேரம் இந்த பெண்ணுடன் பேசினால் நானும் அப்படியே அவரை போலவே மாறிவிடுவேன் போல என்று சொல்லி ஸ்ருதிகா போலவே செய்து காட்டுகிறார். இதை பார்த்த பலரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள் வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்