தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் கேஎஸ் ரவிக்குமார். பல வெற்றிப்படங்களை இவர் தமிழ் சினிமாவுக்கு கொடுத்து உள்ளார். இவர் படங்களுக்கு என்று தற்போதுவரை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. அந்தளவுக்கு குடும்ப ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து இருப்பார் ரவிக்குமார். தனது படங்களில் எதார்த்தமாக காமெடிகளை கொடுத்து மக்களை சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் தற்போது தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என உருவெடுத்து இருக்கிறார். இயக்கத்தை போலவே நடிப்பில் கலக்கி வருகிறார் கே எஸ் ரவிக்குமார்.இவர் கடைசியாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய லிங்கா படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் எந்த படங்களையும் இயக்க ஆர்வம் காட்டாமல் உள்ளார்.
இவர் தற்போது தனது குடும்பத்துடன் நடனமாடி உள்ளார். இந்த வீடியோவை அவரது மகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.