நடிகர் கார்த்திக் நடிக்கும் சர்தார் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் கடைசியாக நடித்த படம் விருமன். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கார்த்திக் பொன்னியின் செல்வன் படத்திலும் வந்திய தேவனாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் வெளியானதற்கு பிறகு கார்த்திக்குக்கு ரசிகர் கூட்டம் பெருகி உள்ளது. இந்த நிலையில் கார்த்திக்கு அடுத்ததாக நடித்து வரும் படம் தான் சர்தார். இந்த படம் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டிருக்கிறது. இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ் மித்ரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராஷி கண்ணா, சிம்ரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரெய்லர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ் லட்சுமணன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் கார்த்திக் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் நடிகை லைலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலமாக மீண்டும் திரைத்துறைக்கு திரும்புகிறார். இந்தப் படத்தில் சிம்ரன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், இன்று மாலை டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படம் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்துடன் மோத இருக்கிறது. இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Sony Music South