நடிகர் சிலம்பரசன் தனது நண்பன் மகத் நடித்திருக்கும் ஹிந்தி படத்திற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடல் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சோனாக்ஷி சின்கா மற்றும் ஹீமா குரேஷி ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் தான் Double XL. இந்த படத்தில் தாலி தாலி என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருக்கிறார். தமிழ் உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன். சிறுவயதிலேயே தனது தந்தையின் படங்களில் நடக்க தொடங்கி பின்னர் இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பது, நடனம் ஆடுவது, பாடுவது படங்கள் இயக்குவது என பல துறைகளிலும் கை தேர்ந்தவராக இருக்கிறார். இந்த நிலையில் இவர் பாலிவுட்டில் முதல் பாடலாக ஒரு பாடலை பாடியிருக்கும் வீடியோவை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

டபுள் எக்ஸ் எல் என்கிற காமெடி டிராமா திரைப்படம் தற்போது ஹிந்தியில் உருவாகி வருகிறது. ஹெல்மெட் என்கிற படத்தை இயக்கியிருந்த ராட்ராம் ரமணி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. படம் நவம்பர் 4ஆம் தேதி ஓடிடித் தளமான நெட் பிளிக்சில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் தாலி தாலி என்கிற பாடல் நடிகர் சிம்பு பாடியிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவின் நெருங்கிய நடிகருமான மகத் நடித்திருக்கிறார்.
Here’s my first song in Hindi,
My debut as a singer in Bollywood & this one is for my friend @MahatOfficial Onwards & upwards ! Proud of you ❤️
Good luck to the whole team of doubleXL Guys get ready to groove with the #TaaliTaali song! https://t.co/4WrANraUxU— Silambarasan TR (@SilambarasanTR_) October 14, 2022
ஹீமா குரேசி இது குறித்த செய்தியை பகிர்ந்து எங்கள் படத்தில் நீங்கள் பாடியுள்ளதற்கு நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கின்றோம், நீங்கள் இல்லை என்றால் இந்த பாடல் முழுமை அடைந்து இருக்காது என்று சிம்புவிற்கு தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார். இந்த பாடலின் மூலமாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்து இருக்கிறார் சிலம்பரசன். நண்பன் மஹத்துக்காக சிம்பு பாடியிருக்கும் அந்த பாடலை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: T-Seires