Categories: சினிமா

கதையே இல்லாத ஒரு மொக்கை படம் இது.! குருதி ஆட்டம் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை

வெளியிட்டது

அதர்வா நடித்துள்ள படம் தான் குருதி ஆட்டம். இந்த படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனங்களை கூறியிருக்கிறார். இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இந்த படம் நேற்று தமிழகமெங்கும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. எட்டுத் தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டே முடிந்த போதிலும், படம் வெளியாவதில் ஏதோ ஒரு சிக்கல் இருந்து கொண்டே இருந்தது. இதனால் படத்தின் வெளியீட்டு தேதியை பலமுறை அறிவித்த பின்பும் படம் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போனது. இந்த நிலையில் நேற்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கதையே இல்லாத ஒரு மொக்கை படம் இது.! குருதி ஆட்டம் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை 1

ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் கதை இரு கபடி குழுக்களுக்கு இடையே இருக்கும் சண்டை பற்றியது ஆகும். தற்போது இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனங்களை முன் வைத்துள்ளார். ப்ளூ சட்டை மாறனை பொறுத்தவரை எந்த படமாக இருந்தாலும், அதை கடுமையான வார்த்தைகளில் விமர்சிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் படம் நன்றாக இருக்கிறது என்று கூறினாலே அதிசயமாக பார்க்கப்படுகிறது. தற்போது இரவின் நிழல் படத்தையும் பார்த்திபனையும் தொடர்ந்து அவர் வீடியோ வெளியிட்டு வறுத்தெடுத்து வருகிறார். இந்த பிரச்சனைகள் ஓயாத நிலையில் அடுத்தடுத்து படங்களை திட்டி அவர் வீடியோ வெளியிட்டு வருகிறார். தற்போது குருதி ஆட்டம் படம் குறித்து அவர் கூறும் பொழுது, இந்தப் படம் மதுரையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மதுரை என்றாலே ரவுடிகள் தான் இருப்பார்கள் என்று காட்டப்படுகிறது. மேலும் இந்த படம் இரண்டு கபடி டீம்களுக்கு இடையே உள்ள சண்டையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் ராதிகா ஒரு சொர்ணாக்கா போல இருந்து கொண்டு மதுரையை ஆட்டி படைத்து வருவதாக காண்பிக்கிறார்கள். மேலும் அதர்வா ஒன்று தெருவில் இறங்கி சண்டையிடுகிறார், இல்லை என்றால் தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு குழந்தைக்காக மருத்துவமனையில் அமர்ந்திருக்கிறார். இதெல்லாம் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. பின்னர் அதர்வாவும், ரவுடியாக காண்பிக்கப்படும் சொர்ணாக்கா ராதிகாவும் இறுதியில் ஒரு சண்டை காட்சியில் சண்டையிடுவது போல காண்பிக்கிறார்கள், தியேட்டர்களில் அந்த காட்சியை பார்த்த பலரும் விழுந்து விழுந்து சிரித்து விட்டனர் என்றும் ப்ளூ சட்டை கூறினார். மேலும் படத்தில் கதை, திரைக்கதை என்று ஒன்றுமே இல்லாத ஒரு மொக்கை படமாக இது இருப்பதாகவும் ப்ளூ சட்டை விமர்சனங்களை கூறினார். அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Youtube video code embed credits: TamilTalikes

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்