Categories: சினிமா

திடீர் உடல்நலக்குறைவு.! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பூ.! என்னாச்சு அவருக்கு?

வெளியிட்டது

நடிகை குஷ்பூ திடீரேன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படங்களை சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். 80, 90களில் முண்ணனி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் 1986ம் ஆண்டு வெளியான வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இவரது ரசிகர்கள் திருச்சியில் கோவில் கூட கட்டியுள்ளனர். சென்னையில் இவர் பெயரில் கிடைக்கும் குஷ்பூ இட்லி மிகப் பிரபலம். இவர் 2000ம் ஆண்டு பிரபல இயக்குனநர் சுந்தர். சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திதா, அனந்திதா என்ற இரு மகள்கள் உண்டு.

திடீர் உடல்நலக்குறைவு.! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பூ.! என்னாச்சு அவருக்கு? 1

சில ஆண்டுகளாக கொஞ்ச உடல் எடை கூடிய இவர், இப்பொது திடீரென மிகவும் உடற்பயிற்சி செய்து உடலை குறைத்து உள்ளார். குஷ்பூவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இது குஷ்பூதானா என்று கேட்கும் அளவிற்கு மாறியுள்ளார். படங்கள் நடிப்பது மட்டுமல்லாது சீரியலிலும் நடித்து வந்தார் குஷ்பூ. பின்பு திமுக, காங்கிரஸ், பிஜேபி என 3 கட்சிகளிலும் பிரச்சார பீரங்கியாகவும் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்து இருந்தார். தனது கணவர் சுந்தர்.சியின் காபி வித் காதல் படத்தை அவரின் அவனி சினி மேக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு விமர்சனங்களை கூறியிருந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். தனக்கு (coccyx bone) முதுகு தண்டு வடத்தில் வலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன். 2நாட்கள் ஓய்வுக்குப் பின் வீடு திரும்ப இருக்கிறேன், முழு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். இரண்டு நாட்களுக்குப் பின் வழக்கமான பணிகளை தொடர்வேன் என்று சொல்லி ஆயுத பூஜை வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அவர் உடல் நலம் பெற வேண்டி பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்