சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் குஷ்பூ தற்போது தனது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவரது மூத்த மகள் அவந்திதா பார்ப்பதற்கு அப்படியே குஷ்பூவை உரித்து வைத்திருக்கிறார்.

தமிழ் திரைப்படத்தில் 90களில் முன்னணி நடிகையாக நடிகை வலம் வந்தவர் நடிகை குஷ்பூ.1980 களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கை தொடங்கிய இவர் முதன்முதலாக 1989 ஆம் ஆண்டு “வருஷம் 16” என்கிற தமிழ் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 1990களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களிலும், சின்னத்திரைகளிலும் நடித்து வருகிறார் குஷ்பூ. மேலும் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
தனது கணவர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் அல்லது இயக்கும் படங்களை “அவ்னி சினி மேக்ஸ்” என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலமும் தயாரித்து வருகிறார். திரைத் துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களாக இருந்தவர்களும் நடித்து விட்டார்.
இவர் நடிப்பில் குறிப்பிட்ட சில படங்களாக சின்ன தம்பி, அண்ணாமலை, நாட்டாமை, கோபாலா கோபாலா, சிம்ம ராசி, சுயம்வரம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, விரலுக்கேத்த வீக்கம் போன்ற பல படங்களை கூறிக் கொண்டே போகலாம். மேலும் நம்ம வீட்டு மகாலட்சுமி, நந்தினி போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
நடிப்பது மட்டுமில்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் அவர் முதலில் திமுக கட்சியில் இணைந்தார். பின்னர் அங்கிருந்து விலகி காங்கிரசுக்கு சென்றார். தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சியில் இயங்கி வருகிறார். மேலும் தேசிய பெண்கள் நல ஆணைய உறுப்பினராகவும் இருந்து வருகிறார் குஷ்பூ.
இந்த நிலையில் தற்போது தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார் குஷ்பூ. ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் உடல் தோற்றத்தில் பருமனாக இருந்ததால் கடுமையாக உருவக்கேலி செய்யப்பட்டனர்.
அவ்வாறு கிண்டலடிப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வந்தார் குஷ்பூ. தற்போது இவர்கள் இருவரும் உடல் எடையை குறைத்து வேற லெவலில் மாறியுள்ளனர்.
குஷ்பூவின் மூத்த மகள் அவந்திகா சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். லண்டனில் உள்ள நடிப்பு பள்ளியில் அவர் படித்து வருகிறார். இந்த நிலையில் குஷ்பூ தனது மகள்களின் சமீபத்திய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
பார்ப்பதற்கு அச்சு அசல் குஷ்புவின் இளம் வயது தோற்றம் போலவே அவரது மூத்த மகள் அவந்திகா இருக்கிறார்.
நான் மகள்களை தான் கேட்டேன் ஆனால் ஆண்டவன் எனக்கு இரு நெருங்கிய தோழிகளை வழங்கி இருக்கிறான் என்று சொல்லி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் குஷ்பூ.! பலரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.