தமிழ் படங்களை மரணமாக கலாய்த்து உருவாகி இருக்கும் ஜிவி பிரகாஷின் “அடியே” ட்ரைலர் இதோ..!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அடியே படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏன்டா தலைல எண்ணை வைக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கி வரும் படம் தான் அடியே. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் வெங்கட் பிரபு, கௌரி மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் நிறிவுனங்கள் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலரை பிரபல முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் தற்போது வெளியிட்டு இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் படங்களை மரணமாக கலாய்த்து உருவாகி இருக்கும் ஜிவி பிரகாஷின் "அடியே" ட்ரைலர் இதோ..! 1

விளம்பரம்

இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராகவும் அவதாரமெடுத்திருப்பவர் நடிகர் ஜிவி பிரகாஷ். டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். பொல்லாதவன், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், தெய்வத் திருமகள், மதராசபட்டினம், சூரரைப் போற்று, அசுரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜிவி பிரகாஷ் தற்போது கைவசம் இடி முழக்கம், அடியே, கள்வன், டியர் மற்றும் தனது 13 வது படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் நடித்திருக்கும் அடியே திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லர் இன்று 4 மணிக்கு வெளியிடப்படும் என்றும், தனுஷ் ட்ரைலரை வெளியிட இருப்பதாகவும் நேற்று படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடையவை  உடல்முடியாமல் மருத்துவமனையில் தந்தை சாருஹாசன்..! ஓடிவந்த மகள் சுஹாசினி..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

தமிழ் படங்களை மரணமாக கலாய்த்து உருவாகி இருக்கும் ஜிவி பிரகாஷின் "அடியே" ட்ரைலர் இதோ..! 3

விளம்பரம்

இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது தமிழ் படங்களை கலாய்த்து இந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment