நடிகர் நெப்போலியனின் அறுபதாவது பிறந்தநாளுக்கு நடிகைகள் குஷ்பூ மற்றும் மீனா இருவரும் அமெரிக்கா வரை சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர். அந்த புகைப்படங்களை நெப்போலியன் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் கிராமத்து கதைக்களத்திற்கு பெயர் போன நடிகராக நெப்போலியன் விளங்கி வந்தார். ‘ஒரு நெல்லு ஒரு நாத்து’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான இவர், சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தனது மகனின் மருத்துவத்திற்காக அமெரிக்கா சென்ற அவர் அங்கேயே ஒரு கட்டத்தில் செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் அவரது வீட்டின் ஹோம் டூர் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

தற்போது சில படங்களில் வில்லனாகவும் துணை வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு 60-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் அழைத்து பிறந்தநாள் பார்ட்டி வைத்து சிறப்பாக கொண்டாடி இருந்தார் நெப்போலியன். இந்த நிலையில் அமெரிக்கா சென்ற குஷ்பூ மற்றும் மீனா இருவரும் நெப்போலியனை நேரில் சந்தித்து அவரது அறுபதாவது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நெப்போலியன், “குஷ்பூ மற்றும் மீனாவின் வருகை தனக்கு மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருந்ததாகவும், இவர்கள் நேரில் வருவார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லை” என்றும் கூறியிருக்கிறார்.
இவ்வளவு தூரம் வந்து தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்திருக்கும் அவர் அவர்களுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். நெப்போலியன் குஷ்பூ இருவரும் இணைந்து ‘எட்டுப்பட்டி ராசா’ என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். அதேபோல ‘எஜமான்’ படத்தில் நெப்போலியன் மற்றும் மீனா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மூவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.