Categories: சினிமா

“ஒரே பொண்டாட்டி நம்பி தான் ஆகவேண்டும்”!!”வேற லெவலில் மாறி சுந்தர்.சி’கே அதிர்ச்சி கொடுத்துள்ள குஷ்பூ!!

வெளியிட்டது

நடிகை குஷ்பூ குழந்தை நட்சத்திரமாக நிறைய ஹிந்தி படங்களில் தோன்றியுள்ளார். பின்னர் மெதுவாக தெலுங்கில் சண்டிகர் வெங்கடேஷ் நடித்த “கலியுக பண்டாவுளு” என்ற படத்தில் அறிமுகமானார். தமிழில் ரஜினி, பிரபு நடிப்பில் உருவான “தர்மத்தின் தலைவன்” படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக அறிமுகமானார்.

"ஒரே பொண்டாட்டி நம்பி தான் ஆகவேண்டும்"!!"வேற லெவலில் மாறி சுந்தர்.சி'கே அதிர்ச்சி கொடுத்துள்ள குஷ்பூ!! 1

தொடர்ந்து  பிரபுவுடன் இவர் நடித்த “சின்னத்தம்பி” படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து ரஜினி, கமல், கார்த்தி, ராமராஜன், சத்யராஜ், சரத்குமார் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் நடித்து முதன்மை நாயகி ஆனார்.

இவர் ஜெயராம் நடித்த “முறை மாமன்” என்ற படத்தில் சுந்தர்.சி யுடன் பணியாற்றினார். இதன் மூலம் இருவருக்கும் காதல் மலர, 2000அம் ஆண்டு திருமணம் முடித்தார். தமிழ் திரையுலகில் ஒரு நாயகிக்கு முதல் முறை கோவில் கட்டி கும்பிட்டது இவருக்கே ஆகும்.

அந்த அளவிற்கு இவரின் புகழ் அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்தார். திருமணம் ஆனா இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முத்த மகள் விரைவில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். சில ஆண்டுகளாக கொஞ்ச உடல் எடை கூடிய இவர், இப்பொது திடீரென மிகவும் உடற்பயிற்சி செய்து உடலை குறைத்து உள்ளார்.

லண்டனில் இப்பொது சுற்றுலா சென்றுள்ள இவர் அந்த புகைப்படங்களை  அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்பொது சமூக வலைதளவாசிகளால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

உண்மையில் இவர் தான் நம்முடைய குஷ்புவா? என சொல்லும் அளவிற்கு மிகவும் இளமையாக தோன்றுகிறார். மேலும் ஒருவர் இது நம்ப குஷ்பூ தானா  என ட்விட்டரில் கேட்க அதற்கு அவரே “நம்பி தான் ஆகா வேண்டும், ஒரே பொண்டாட்டி” என கிண்டலாக கூறி உள்ளார்.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்