Categories: சினிமா

“டைமண்ட் பாஸ் இருந்தும் என் மகள்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது” குஷ்பூ அறிக்கை.!

வெளியிட்டது

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஏ.ஆர் ரகுமான் இசை விழாவில் தன் மகள்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ஆனால் இதில் ஏ.ஆர் ரகுமான் மீது எந்தவித தவறும் இல்லை என நடிகை குஷ்பூ தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுத்திருக்கிறார். இரண்டு நாட்களாக ஏ.ஆர் ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை விழா பற்றி தான் ஊரெங்கும் பேச்சாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இசை விழாவில் நடந்த மிகப்பெரிய குளறுபடி தான். டைமண்ட், பிளாட்டினம், கோல்ட் என பல வகைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அனைவரையும் ஒரேடியாக உள்ளே அனுமதி கொடுத்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. அதேபோல போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. முதல்வர் வந்த கான்வாயும் இந்த கூட்ட நெரிசலில் சிக்கியதால் மாற்று வழியில் அனுப்பப்பட்டது.

"டைமண்ட் பாஸ் இருந்தும் என் மகள்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது" குஷ்பூ அறிக்கை.! 1

இந்த நிலையில் இந்த தவறுக்கு தானே பொறுப்பேற்பதாக ஏ.ஆர் ரகுமான் கூறியிருந்தார். டிக்கெட்டுகளை புகைப்படம் எடுத்து மெயிலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தார். பலரும் தங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு ஏ.ஆர் ரகுமானை வலியுறுத்தி வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர் ரகுமானின் மகள் கதீஜா ஆகியோர் ரகுமானுக்கு ஆதரவாக பதிவுகளை போட்டு வந்தனர். யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இசை விழாவை ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை, அதனுடைய கஷ்டம் எனக்கு தெரியும், எனவே நான் ஏ.ஆர் ரகுமான் பக்கம் நிற்பதாக கூறியிருந்தார்” தொடர்ந்து தற்போது ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருக்கும் குஷ்பூ ஏ.ஆர் ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


அதில் அவர் தன்னுடைய மகள்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் விழா நடக்கும் இடத்தை அடையவே மூன்று மணி நேரம் ஆனது. பிளாட்டினம் டிக்கெட் வைத்திருந்த போதிலும் அவர்களால் நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடியவில்லை. இதில் ஏ.ஆர் ரகுமான் இதே எந்த தவறும் இல்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தான் இந்த தவறுக்கு முழு காரணம் என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்