நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ தற்போது பக்ரீத் பண்டிகையை கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்தப் புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் ரஜினி, கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் என்று பல முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்திலேயே இணைந்து நடித்து பிரபலமானார். பின்பு 2000 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் குஷ்பூ இறுதியாக வாரிசு படத்தில் கூட நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் நடித்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டு இருந்தது. நடிகையாக மட்டுமல்லாமல் தனது கணவருடன் இணைந்து அவனி சினி மேக்ஸ் என்கிற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வரும் அவர் கடைசியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீரா என்கிற சீரியலை இயக்கி அதில் நடித்தும் இருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த சீரியல் பாதியிலேயே நின்று போனது. சீரியல் துவங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாவே சீரியலை முடித்து இருந்தார் குஷ்பூ. நடிப்பது, தயாரிப்பது, சின்னத்திரை மட்டுமில்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். ஆரம்பத்தில் திமுகவில் பணியாற்றி வந்த அவர் அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில. இணைந்தார் தற்போது காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி உயர்வும் பெற்று இருக்கிறார். அரசியலில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ சமூக வலைத்தளங்களிலும் மிக ஆக்டிவாக இருப்பார்.
சமூகப் பிரச்சினைகள் குறித்து அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மேலும் நேஷனல் மீடியாக்களிலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கலந்து கொண்டு அக்கட்சிக்காக பேசி வருகிறார். சமூக வலைத்தளங்களில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு சுடச்சுட பதிலடியும் கொடுத்து வருகிறார். குஷ்பூவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை அவருக்கு அனந்திதா, அவந்திகா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகள் அவந்திகா லண்டனில் உள்ள படிப்பு பள்ளியில் படித்து வருகிறார். அவர் விரைவில் படிப்பை நிறைவு செய்து திரையுலகில் நடிகையாக அறிமுகமா இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இன்று பக்ரீத் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை குஷ்புவும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். மஅருகில் இருக்கும் மசூதிக்குச் சென்ற அவர் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் அல்லா இப்போது போல எப்போதும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அருள் புரியட்டும் என்று அவர் அந்த புகைப்படங்களை பகிர்ந்து பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். குஷ்பூவின் ரசிகர்களும் அவருக்கு தங்களது பக்ரீத் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். குஷ்புவின் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஷ்பூ மும்பையை சேர்ந்தவர் என்பதும் அவர் இஸ்லாமிய மதத்தவர் என்பதும் சுந்தர்சியை்ய காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் இந்துவாக மதம் மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது எம்மதமும் சம்மதம் என்று வாழ்ந்து வரும் குஷ்பூ பக்ரீத்தை சிறப்பாக கொண்டாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.