“எல்லாமும் இங்கே, அல்லாஹ் உன்னாலே ஆகும்” ‘லால் சலாம் படத்தின் ‘அன்பாளனே பாடல் வெளியானது.!

வெளியிட்டது

‘லால் சலாம்’ திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து “அன்பாளனே..” என்கிற பாடலை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். சூப்பர் ஸ்டாருக்காக தற்போது தேவா இந்த பாடலை பாடியிருக்கிறார். நெகிழ்ச்சியான வரிகளுடன் இந்த பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் திரைப்படம் தான் ‘லால் சலாம்’. இந்த படம் பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"எல்லாமும் இங்கே, அல்லாஹ் உன்னாலே ஆகும்" 'லால் சலாம் படத்தின் 'அன்பாளனே பாடல் வெளியானது.! 1
இந்தப் படத்தில் கதாநாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் நடித்திருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் பிரபல காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா, ஜீவிதா, விவேக் பிரசன்னா, தங்கதுரை, லிவிங்க்ஸ்டன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து பல பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சில நாட்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லர் வீடியோவையும் படக்குழுவினர் வெளியே தெரிந்தனர்.

படம் வெளியாக இன்னும் ஒரு நாளே மீதம் இருக்கும் நிலையில் தற்போது படத்தில் இருந்து “அன்பாளனே..” என்கிற பாடலை படக் குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். இந்தப் பாடலை பிரபல இசை அமைப்பாளர் தேவா பாடியிருக்கிறார். பாடல் வரிகளை யுக பாரதி எழுதியிருக்கிறார். அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்