Categories: சினிமா

“பாம்பேல பாய் ஆளே வேற மாதிரி..! சூப்பர் ஸ்டாரின் தெறி நடிப்பில் ‘லால் சலாம்’ ட்ரைலர் இதோ.!

வெளியிட்டது

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘லால் சலாம்’. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வீடியோ வெளியாகியிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்கு பின்னர் ‘லால் சலாம்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் கதாநாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் இருவரும் நடித்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"பாம்பேல பாய் ஆளே வேற மாதிரி..! சூப்பர் ஸ்டாரின் தெறி நடிப்பில் 'லால் சலாம்' ட்ரைலர் இதோ.! 1
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களாக இருக்கும் செந்தில், தம்பி ராமையா, நடிகர் லிவின்ஸ்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படத்தின் டிரைலர் 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரிய வரவேற்பை இந்த ட்ரைலர் பெற்று வருகிறது. பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அவர்களும் இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.


நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் ‘லால் சலாம்’ படத்தின் ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்