Categories: சினிமா

நீங்கள் ஒரு Pure மேஜிக் அப்பா.! லால் சலாம் படப்பிடிப்பு முடிவடைந்ததை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினி.!

வெளியிட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் படத்தின் அவரது பகுதிகள் தற்போது நிறைவடைந்து இருப்பதாக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 169 வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு, மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வருகிறது. இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது. ரஜினிகாந்தின் காட்சிகள் சுமார் 20 நிமிடம் வரை இடம்பெறும் என்று கூறப்படுகிறது. தான் லால் சலாம் படத்தில் நடிக்க இருக்கும் செய்தியை நடிகர் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு உறுதி செய்திருந்தார். மேலும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

நீங்கள் ஒரு Pure மேஜிக் அப்பா.! லால் சலாம் படப்பிடிப்பு முடிவடைந்ததை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினி.! 1
மேலும் படத்தின் படப்பிடிப்பு, பூஜை என ஒவ்வொன்றிலும் ரஜினிகாந்த் முன்னிலையில் இருந்து தன் மகளுக்கு சப்போர்ட்டாக இருந்து வந்தார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்து முடிந்திருந்தது. தொடர்ந்து மும்பையில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. பின்னர் ராஜஸ்தானிலும் சில காட்சிகளை படமாக்கினர். அங்கிருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வந்தனர். மொய்தீன் பாய் என்கிற இஸ்லாமியராக ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். தலையில் தொப்பியுடன் இஸ்லாமியர்கள் அணியும் உடை போல அணிந்து கொண்டு நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது. பாட்ஷா படத்திற்கு பின்னர் இஸ்லாமியராக ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படம் விளையாட்டுப் போட்டியை மையமாக வைத்து உருவாக்கி வருவதாக தெரிகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜூலை மாதம் படத்தின் சூட்டிங் முழுவதையும் முடித்துவிட்டு விரைவில் படத்தை வெளியிட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் காட்சிகள் முடிந்து விட்டதாக தெரிகிறது. அந்த புகைப்படத்தை பகிர்ந்து உங்களை வைத்து படம் இயக்குவது ஒரு மிராக்கிள்தான், நீங்கள் ஒரு பியூர் மேஜிக் அப்பா, மொய்தீன் பாய் மற்றும் லால் சலாம் நிறைவடைந்து விட்டது என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்