“பல ஆண்டுகால சேவை…தேடி வந்த கௌரவம்..பாராட்டுகளை அள்ளும் ராகவா லாரன்ஸ்”

வெளியிட்டது

"பல ஆண்டுகால சேவை...தேடி வந்த கௌரவம்..பாராட்டுகளை அள்ளும் ராகவா லாரன்ஸ்" 1

துணை நடன இயக்குனராக இருந்து பின்னர் நடன இயக்குநராகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து நாயகனாகவும், இயக்குனராகவும் இப்பொது பிரபலமாக வளம் வருபவர் ராகவா லாரன்ஸ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலுள்ள சூப்பர்ஸ்டார் நடிகர்களுக்கும் இவர் நடன அமைத்துள்ளார். அதன் மூலம் முதல் முறையாக இயக்குனராக தெலுங்கில் “மாஸ்” என்ற படத்திலும், தமிழில் ஸ்டைல் ” என்ற படத்திலும் அறிமுகமானார். ஆனால் 2007ஆம் ஆண்டு இவர் இயக்கி நடித்து வெளியான “முனி”  படம் இவருடைய திரை வாழ்க்கையின் மிக முக்கிய விஷயமாக மாறியது.

அதன் முதல் இப்பொது தமிழில் பேய் படம் என்றால் அது ராகவா லாரன்ஸ் தான் என்று சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து பேய் படங்களாகவே நடித்து வருகிறார். காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3, சிவலிங்கா, இப்பொது அறிவிக்கப்பட்டு எதிர்பார்ப்பி எகிற செய்துள்ள சந்திரமுகி 2 என அனைத்துமே பேய் படங்கள் தான். நடுவுல சில நார்மல் படங்களுலும் நடித்து வருகிறார்.

சந்திரமுகி 2 படத்தில் நடிகர் வடிவேலு மட்டுமே இப்போதைக்கு ஒப்பந்தமாகி உள்ளார். இயக்குனர் பி.பசுவே இயக்க, லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். கீரவாணி இசையமைக்க இதுற்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. நாயகியாக நடிக்க ஆண்ட்ரியா மற்றும் ராஷி கன்னா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்த பட்டு வருவது கூறப்படுகிறது. நடுவில் திரிஷா எனவும் தற்போது லட்சுமி மேனன் எனவும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை.

சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் லாரன்ஸ் அவர்கள் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார். இதனால் இவருக்கு ஒன்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சமீபத்தில் கூட ஜெய்பீம் படத்தின் உண்மையான நாயகி பார்வதிக்கு இவர் பண உதவி செய்து இருந்தார். இந்த நிலையில் இவரின் சமூக சேவையை பாராட்டி இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது, சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் சமூக சேவைக்கான டாக்டர் பட்டத்தை லாரன்சுக்கு வழங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் லாரன்ஸ் சார்பில் அவருடைய தாயார் கண்மணி அந்த டாக்டர் பட்டத்தை பெற்று இருக்கிறார். மேலும், இந்த செய்தியை லாரன்ஸ் ட்வ்ட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்