“சிவாஜியாக மாறிய மம்மூட்டி….அசர வைக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் டீசர்”

"சிவாஜியாக மாறிய மம்மூட்டி....அசர வைக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் டீசர்" 1

மலையாள திரையுலகம் ஆரம்பக்காலங்களில் இருந்தே ஜனரஞ்சகமான நடிகர்களையும், கதைக்களங்களையும் கொண்டே இயங்கி வருகிறது. இதனால் இவர்களுடைய படங்கள்ளும், நடிகர்களும் கேரளாவை தாண்டி எளிதில் இந்திய முழுவதுமே அறியப்படும் நடிகர்களாக இருக்கிறார்கள். அதுவும் மிக சிறப்பாக நடிக்க தெரிந்த நாயகர்களாக போற்றப்படுகிறார்கள். அறிமுகமான முதல் படம் முதல் இன்று வரை 70 வயதை தாண்டியும் வெளிவரும் படங்களில் எதோ ஒரு புது முயற்சிகளை செய்து கொண்டே இருப்பவர் நடிகர் மம்மூட்டி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

"சிவாஜியாக மாறிய மம்மூட்டி....அசர வைக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் டீசர்" 3

1980ஆம் அறிமுகமான நடிகர் மம்மூட்டி, மலையாள திரையுலகில் ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, பாடகராக, விநோயோகிஸ்தராக கொடிகட்டி இன்றும் முன்னணி நடிகராக திகழந்து வருகிறார். மலையாள சினிமாவை தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து மிரட்டியுள்ளார், இன்றளவும் தமிழ் ரசிகர்களுக்கு குறிப்பாக தென்தமிழகத்தில் கடை வைத்திருப்பவர்களிடம் உங்கள் வீட்டு முத்த ஆண் எவ்வாறு இருப்பார் என கேட்டால், அவர் “ஆனந்தம” படத்தில் வரும் திருப்பதி போல தான் இருப்பார் என கூறுவார்கள். அந்த அளவிக்ரு தேர்ந்த நடிப்பை அந்த படத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.

விளம்பரம்
தொடர்புடையவை  விஜய் படத்த்தை ‘காப்பி’அடிச்சு எடுக்கப்பட்ட படம்! ஆஸ்கார் விருது படம் மீது வழக்கு?

"சிவாஜியாக மாறிய மம்மூட்டி....அசர வைக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் டீசர்" 5

50 வருட சினிமா வாழ்க்கையில் 400 படங்களை தாண்டி இவர், இன்னும் சிறப்பாக நடித்து வருகிறார். 3 தேசிய விருதுகள், 13 பிலிம் பேர் விருதுகள் என பலவாகியிலான விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான “பீஷ்ம பர்வம்” படம் மாபெரும் வெற்றியை பெற்றது. பெரிய நாயகர்கள் நடிக்க தயங்கும் ஜாதி வெறி பிடித்த கௌரவ கொலை செய்யும் கதாபாத்திரத்தில் அண்மையில் OTTஇல் வெளியான “புழு” படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தின்னர்.

விளம்பரம்

"சிவாஜியாக மாறிய மம்மூட்டி....அசர வைக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் டீசர்" 7

இப்பொது இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் “நண்பகல் நேரத்து மயக்கம்”. மத்திய தூக்கத்தை அடிப்படையாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தை “ஜல்லிக்கட்டு” படம் இயக்கிய லிஜோ ஜோஷ் போலிசேரி இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி ஆர்வத்தை தூண்டிய நிலையில், கடந்த பக்ரீத் அன்று மற்றொரு டீஸ்ர் வெளியாகி மிகவும் வரவேற்புகளை குவித்து வருகிறது. நடிகர் சிவாஜியின் “கௌரவம்” படத்தில் வரும் ஒரு காட்சியை ஒரே டேக்கில் அப்படியே நடித்துள்ளார் மம்மூட்டி இந்த டீசரில். வெளியான முதலே மிக பெரிய வரவேற்பினை இது பெற்றுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  சூர்யா 42-படத்தின் டைட்டிலை குட்டி டீசருடன் அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.! இதோ வீடியோ.!

Video Courtesy – Dulqeer Salman

விளம்பரம்

 

விளம்பரம்

Leave a Comment