பட்ஜெட் 2020: தலைவர்கள் கருத்து

இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட் 2020: தலைவர்கள் கருத்து 1
மன்மோகன் மற்றும் மோடி

பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறுகையில்,”மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ” தற்போது தாக்கலாகியுள்ள பட்ஜெட் மிக நீண்டது. அதனால், அதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு வெகு நேரம் தேவைப்படும்.” என்றார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறும் போது, ஏழை, நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் இது இல்லை என்றும், புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்தவிதமான திட்டமும் இடம்பெறவில்லை ஏன அவர் கூறினார். மேலும், புதிய தொழில் நிறுவனங்கள் நாட்டில் எங்கு இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்