பொருளாதார மந்தநிலை காரணமாக பெரிதும் எதிர்பாக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “நாட்டுமக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமைத்துள்ளது. விவசாயம், பாசன வசதி, ஊரக வளர்ச்சியை மையமாக வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
நீர் பற்றாக்குறையால் அடிக்கடி பாதிக்கும் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். விளைநிலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்வதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது, ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்தற்கு தமிழகம் சார்பில் நன்றி எனக் கூறியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “கீழடி ஆய்வுகளின் முடிவுகளை மாற்றி, வரலாற்றை திருத்தவும், திரிக்கவும் முயல்வதை தமிழகம் சகித்து கொள்ளாது. பாஜக விரும்பும் கலாச்சர திணிப்பை செய்யும் ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது.
பட்ஜெட்டில் அர்த்தமுள்ள திட்டங்களை எதையும் காண முடியவில்லை. மத்திய அரசிற்கு தொலைநோக்குப்பார்வை இல்லை, தொலைந்து போன பொருளாதாரத்தை மீட்க வழியும் தெரியவில்லை. மத்திய பட்ஜெட்டில் திமுகவிற்கு மனநிறைவில்லை என்று கூறியுள்ளார்.