Categories: சினிமா

“இந்துத்துவா என்றும் இந்தியாவாக முடியாது” – “காளி” பட இயக்குனர் லீனா மணிமேகலை!!

வெளியிட்டது

இந்தியாவை போட்டுத்தமட்டில் சினிமாவும் மக்களின் மிக முக்கிய அங்கமாகும். குறிப்பாக சினிமா ஒன்றில் அரசியலோ அல்லது சமூகம் சார்ந்த ஒரு விஷயம் பேசப்பட்டால், பிரச்சனை தானாகவே வந்துவிவிடும். படங்களில் காட்டப்படும் விஷயங்களில் படக்குழு எந்த ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறது எனபதையும் பொறுத்தே அந்த படங்கள் இருக்கும்.

"இந்துத்துவா என்றும் இந்தியாவாக முடியாது" - "காளி" பட இயக்குனர் லீனா மணிமேகலை!! 1

லீனா மணிமேகலை பாலியல், சமூக ஒடுக்குமுறை, ஈழப்போராட்டங்கள் என பல பிரச்சனைகள் குறித்து திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். தான் இயக்கியுள்ள மற்றொரு படம் “காளி” போஸ்டரை இணையத்தில் பகிர்ந்து இருந்தார் லீனா மணிமேகலை. அந்த போஸ்டர் தற்போது பெரும் புயலை கிளப்பி வருகிறது. மணிமேகலை இயக்கிய காளி திரைப்படம் ஜூலை 2ம் தேதி கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள அகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ‘ரிதம்ஸ் ஆஃப் கனடா’ என்ற நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

அந்த ஆவணப்படத்தின் போஸ்டரில் காளிதேவி ஒரு கையில் சிகரெட் புகைப்பது போன்றும், மற்றொரு கையில் LGBTQ கொடியும் வைத்திருப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிதுவிட்டதாக கூறி லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை பகிர்ந்தனர். மேலும், டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் உள்ளிட்ட பகுதிகளில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதற்கு லீனா மணிமேகலை தரப்பிலிருந்து விளக்கம் தரப்பட்ட போதிலும், அதற்கு மிக பயங்கர எதிர்ப்புகள் வெளியாகவே, அகா கான் அருங்காட்சியகம் ஆவணப்படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து அகற்றி, வருத்தமும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், லீனா, தனது ட்விட்டர் பக்கத்தில், சிவன் மற்றும் பார்வதி வேடமிட்ட நாடக கலைஞர்கள் புகைப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, கிராமப்புற நாடகக் கலைஞர்கள் நிகழ்ச்சியை எப்படி நடத்துகிறார்கள் என்பது பற்றி பா.ஜ.கவின் ஊதியம் பெறும் ட்ரோல் ஆர்மிக்கு தெரியாது. இது என்னுடைய படம் அல்ல. அன்றாட கிராமப்புற இந்தியாவிலிருந்து வரும் இது போன்ற கலைகளை, சங்பரிவாரங்கள் தங்கள் இடைவிடாத வெறுப்பு, மத வெறியால் அழிக்க நினைக்கிறார்கள். இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது என பதிவிட்டுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்