தமிழ் திரையுலகின் முத்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் கதை படமாக பல நாயகர்களும் இயக்குனர்களும் போராடி உள்ளனர். எம்.ஜி.ஆர் ஆசைப்பட்ட இந்த கல்கியின் தொடர் பின்னர், புராதான கதைகளை கொண்டு படம் எடுத்து வரும் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் பெரிய ஆவல் இருந்தது.

ஆனால் சில காரணங்களால் கைவிடப்பட்டு இப்பொது மீண்டும் மணிரத்னம் இயக்கத்திலேயே விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என நட்சத்திர பட்டாளத்துடன் இந்த படம் தயாராகி வருகிறது. தமிழ் திரையுலகில் இருந்து பாகுபலிக்கு போட்டியாக உருவாகிறது என எதிர்பார்க்கும் பலருக்கும் இந்த படம் எடுக்க கஷ்ட பட்ட வரலாறு தெரியாது.

படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்வும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோரின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏற்கனவே பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நாளை 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது. இதில் பொன்னியின் செல்வன் தமிழ் டீசரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் இந்தி ரீசரை அமிதாப் பச்சனும், மலையாளம் ரீசரை மோகன்லாலும், தெலுங்கு டீசரை மகேஷ்பாபு, கன்னடம் டீசரை ரக்ஷித் ஷெட்டியும் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
