வாயில் சிகரெட்..கையில் LGBTQ கொடி..பிரபல பெண் இயக்குனர் படத்தின் போஸ்டரால் வெடித்த சர்ச்சை

வெளியிட்டது

இயக்குனர் மற்றும் கவிஞர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லீனா மணிமேகலை ஒரு கவிஞர் ஆவார். இவர் பெண்ணியம் குறித்தும், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், சாதி வன்முறைகள் குறித்தும் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார். இவர் சில ஆவணப்படங்களையும், சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். பறை, தேவதைகள், பலிபீடம் போன்ற ஆவணப்படங்களையும், செங்கடல், மாடத்தி போன்ற படங்களையும் இயக்கி இருந்தார்.

வாயில் சிகரெட்..கையில் LGBTQ கொடி..பிரபல பெண் இயக்குனர் படத்தின் போஸ்டரால் வெடித்த சர்ச்சை 1

செங்கடல் படமானது இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்கள் படும் இன்னல்கள் பற்றிய கதை. மாடத்தி படமானது குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக நடக்கும் சாதிய வன்முறைகள் குறித்த படம். இந்த மாடத்தி திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. இந்த படம் மட்டும் சுமார் 15விருதுகளை வாங்கியிருக்கும். ஓடிடி தளத்தில் வெளியான போதும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது மாடத்தி படம்.இந்த நிலையில் அடுத்த ஆவணப்படமாக காளி என்ற படத்தை இயக்க உள்ளார் லீனா மணிமேகலை. அந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில் காளி வேடமணிந்த பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பது போலவும், கையில் LGBTQ கொடியை பிடித்து இருப்பது போலவும் உள்ளது. இதை பார்த்த பலரும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்துள்ளதாக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். ட்விட்டரில் இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்று #ArrestLeenaManimekali ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பல வட இந்தியர்கள் பகிர்ந்து நுபுர்ஷர்மா பேசியதை மட்டும் பெரிது படுத்தினீர்கள் லீலா மணிமேகலை செய்து இருக்கும் காரியத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளனர். சிலர் லீலாவின் முகவரியை பகிர்ந்து இதை நிறைய ஷேர் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்