படப்பிடிப்பில் விஷாலுக்கு நடந்த விபத்து..பயங்கர காயம் ஆனதால் பாதியிலேயே நிறுத்தப்பட ஷூட்டிங்..

படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது விஷாலுக்கு விபத்து ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் லத்தி. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்கனர் வினோத் குமார் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக இந்த படம் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது விஷாலுக்கு ஏற்பட்ட விபத்தால் படத்தின் ஷூட்டிங் இரண்டாவது முறையாக நிறுத்தப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில் விஷாலுக்கு நடந்த விபத்து..பயங்கர காயம் ஆனதால் பாதியிலேயே நிறுத்தப்பட ஷூட்டிங்.. 1

விளம்பரம்

நடிகர் விஷாலைப் பொறுத்தவரை பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சங்கத்திலும் உயர்ந்த பொறுப்பில் உள்ளார். 2004ம் ஆண்டு வெளிவந்த செல்லமே படத்தின் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார். பின்னர் சண்டகோழி, திமிரு, அவன் இவன், துப்பறிவாளன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். அரசியலுக்கு வர ஆசைப்பட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேரமாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வீரமே வாகை சூடும். தற்போது ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லத்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். படப்படிப்பு ஜனவரியில் தொடங்கியபோது விஷாலின் கையில் காயம் ஏற்ப்பட்டது. இதனால் சில நாட்கள் படபிடிப்பு ரத்தானது. கேரளாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் மீண்டும் படபிடிப்புக்கு திரும்பினார்.

தொடர்புடையவை  அமரன் படத்திற்கு எதிராக போராட்டம்..! படத்தை தடை செய்ய வலியுறுத்தல்..!

படப்பிடிப்பில் விஷாலுக்கு நடந்த விபத்து..பயங்கர காயம் ஆனதால் பாதியிலேயே நிறுத்தப்பட ஷூட்டிங்.. 3

விளம்பரம்

படபிடிப்புகள் ஓரளவுக்கு நிறைவடைய இருக்கும் சூழலில் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு ரவுடியை கைது செய்து ஜீப்பில் ஏற்றிச் செல்லும் போது பின்னால் துரத்தி வரும் 100 ரவுடிகளை ஜீப்பில் இருந்து இறங்கி தாக்குவது போன்ற சீன். அப்போது அந்த ரவுடிகள் விஷாலை சூழ்ந்து கொண்டு தாக்குவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். கை,கால், உடம்பில் தாக்குவது போன்ற சீன்களை எடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார் விஷால்.

படப்பிடிப்பில் விஷாலுக்கு நடந்த விபத்து..பயங்கர காயம் ஆனதால் பாதியிலேயே நிறுத்தப்பட ஷூட்டிங்.. 5

விளம்பரம்

ரவுடிகளை துரத்திக் கொண்டு செல்லும் காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கால்களில் அடிபட்டுள்ளது. இதனால் அவர் வலி தாங்கமுடியாமல் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காலில் எலும்பு முறிவு இல்லை வலி தொடர்ந்தால் அவரால் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

படப்பிடிப்பில் விஷாலுக்கு நடந்த விபத்து..பயங்கர காயம் ஆனதால் பாதியிலேயே நிறுத்தப்பட ஷூட்டிங்.. 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment