Categories: சினிமா

Vijay இனி ரசிகர்களை தேடி வருவார்..! Legend Saravanan அதிரடி பேட்டி..!

வெளியிட்டது

பிரபல தொழிலதிபரான சரவணன், லெஜெண்ட் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகி உள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பல விமர்சனங்களை பெற்று இருந்தது. பல ரசிகர்களும் சரவணனை கடுமையாக திட்டி இருந்தனர். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தற்போது தன்னை மெருகேற்றி, எதிர்நீச்சல் , கருடன் பட இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Vijay இனி ரசிகர்களை தேடி வருவார்..! Legend Saravanan அதிரடி பேட்டி..! 1

இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. அங்கு கிளம்பிய இவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது விஜயின் அரசியல் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இதுவரை ரசிகர்கள் விஜயை தேடி சென்றனர், இனி விஜய் ரசிகர்களை தேடி வருவார் என கூறி உள்ளார்.

மேலும் தானும் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாகவும், மக்களுக்கு நல்லது செய்ய வருவேன் என கூறியுள்ளார். தான் அரசியலுக்கு வந்தால் மும்முனை போட்டிதான் இருக்கும் என்பதை போலவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்