“லியோ இசை வெளியீட்டு விழா நிறுத்தப்படுகிறது” தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ்

வெளியிட்டது

மிகவும் எதிர்பார்த்த லியோ ஆடியோ லாஞ்சை தற்போது நிறுத்திவிட்டதாக படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதிக அளவிலான நுழைவுச்சீட்டு கோரிக்கைகள் வருவதால் பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்த ஆடியோ லாஞ்சை நிறுத்துவதாக தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தளபதி விஜய் நடிப்பில் 67-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து வருகிறது.

"லியோ இசை வெளியீட்டு விழா நிறுத்தப்படுகிறது" தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ் 1

இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், ஆக்சன் கிங் அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. படத்தில் இருந்து டைட்டில் அறிவிப்பு டீசரும், நா ரெடி தான் வரவா என்கிற பாடல் மட்டுமே வெளியாகியிருந்தது. அடுத்தடுத்து அப்டேட்டுகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் லியோ ஆடியோ வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளும் தொடங்கி நடந்து வந்த நிலையில் தற்போது ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆடியோ லான்ச் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு என்ட்ரி பாஸ் கேட்டு வந்த கோரிக்கையினால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஆடியோ லான்ச் கைவிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பலர் நினைப்பது போல எந்த அரசியல் அழுத்தமோ பிற காரணங்களோ இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

Twitter Original Source From: Seven Screen Studio

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்