எதிர்நீச்சல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டில் இருக்கும் மருமகள்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறுமாறு குழந்தைகள் ஐடியா கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக நந்தினி மகளாக இருக்கும் தாரா நீ வீட்டை விட்டு வெளியே சென்று விடு அம்மா, அப்பொழுதுதான் உன் அருமை இந்த வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு புரியும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இதனால் மருமகள் அடுத்த என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாரிமுத்து இல்லாத காரணத்தினால் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த தொடர் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மாரிமுத்துவின் இடத்தை நிரப்பும் வகையில் ஞானம், கதிர், விசாலாட்சி என அனைவரும் வீட்டு மருமகள்களை பாடாய்படுத்தி வருகின்றனர். ஆனால் இது ரசிகர்கள் பலருக்கும் எரிச்சலை தான் ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் விசாலாட்சியையும், கதிரையும் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பெண்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நந்தினி மகள் தாரா இந்த வீட்டை விட்டு வெளியே போய் விடு அம்மா என்று கூறுகிறார்.

மறுநாள் காலை விசாலாட்சி இந்த வீட்டு பெண்கள் இனிமேல் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது குறுக்கிடும் ஈஸ்வரி இனிமேல் அந்த முடிவை நான் எடுக்கிறேன் என்று சொல்லி கோபத்துடன் பேசுகிறார். இதனால் விசாலாட்சி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV