Categories: சினிமா

‘லியோ’ படத்திலிருந்து வெளியானது “நான் ரெடி தான் வரவா” வீடியோ பாடல்..! | Naa Ready than Varava Video Song

வெளியிட்டது

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘லியோ’ படத்தில் இருந்து ‘நான் ரெடி தான் வரவா’ பாடலின் முழு வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். வெளியான சில மணி நேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து இந்த பாடல் சாதனை புரிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான இவர், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என்று வெற்றி படங்களை கொடுத்தார். இவர் இயக்கிய நான்கு படங்களையும் வெற்றி படங்களாக அமைந்த நிலையில் தளபதி விஜயுடன் மீண்டும் இரண்டாவதாக கூட்டணி அமைத்து, விஜயின் 67வது படமான ‘லியோ’ படத்தை எடுத்து முடித்து இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'லியோ' படத்திலிருந்து வெளியானது "நான் ரெடி தான் வரவா" வீடியோ பாடல்..! | Naa Ready than Varava Video Song 1

சில மாதங்களுக்கு முன்பாக வெளியான ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூலையும் வாரி குவித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தில் நடிகை திரிஷா, பிரியா்ஆனந்த், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி என்று மிகப்பெரிய பட்டாளமே படத்தில் நடித்து முடித்திருந்தது. படத்தில் பெரிய அளவில் எந்த பாடல்களும் இல்லை. இரண்டு பாடல்கள் மட்டுமே இருந்தது. அதிலும் குறிப்பாக ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.


இந்தப் பாடலை விஷ்ணு எடாவன் எழுத தளபதி விஜய் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து பாடியிருக்கின்றனர். மேலும் இந்த பாடலில் வரும் ராப் பகுதிகளை பிக் பாஸ் பிரபலம் அசல் கோலார் எழுதி பாடியிருந்தார். இந்த பாடலின் முழு வீடியோ தொகுப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்