கமல் முன்பு பூர்ணிமாவை வச்சி செய்த ஹவுஸ்மேட்ஸ்.! விக்கி விக்கி அழுத பூர்ணிமா.! பிக்பாஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது வீட்டில் உள்ள அனைவரும் பூர்ணிமாவிற்கு எதிராக கமலிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேச முடியாமல் தொண்டை விக்கி பூர்ணிமா அழுது கொண்டிருக்கிறார். தனக்கு தொண்டை அடைப்பதாக கமலிடம் கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 49 நாட்களும் 50 வது எபிசோடையும் கடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கமல் முன்பு பூர்ணிமாவை வச்சி செய்த ஹவுஸ்மேட்ஸ்.! விக்கி விக்கி அழுத பூர்ணிமா.! பிக்பாஸ் ப்ரோமோ 1
இருவரும் இணைந்து கொண்டு மற்றவர்களை புறம் பேசுவது, மற்றவர்களின் ஆட்டத்தை எப்படி கெடுக்க வேண்டும் என்று பேசுவது என பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பூர்ணிமாவை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தொடர்ந்து பிக் பாஸ் குழுவினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கமல் “வெற்றி நடை போடுபவர்”, “வெட்டி நடை போடுபவர்” என்கிற இரண்டு போஸ்டர்களை கொடுக்கிறார். அதில் வீட்டில் இருக்கும் பலரும் வெற்றி நடை போடுபவர்கள் அர்ச்சனா என்று கூறுகின்றனர். வெட்டி நடை போடுபவர்கள் என்று மாயா மற்றும் பூர்ணிமாவை கூறுகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  அழகில் தெறிக்க விடும் சுந்தரி சீரியல் கேபி..! வெறித்தனமாக வைரலாகும் புகைப்படம்..!

கமல் முன்பு பூர்ணிமாவை வச்சி செய்த ஹவுஸ்மேட்ஸ்.! விக்கி விக்கி அழுத பூர்ணிமா.! பிக்பாஸ் ப்ரோமோ 3
இதனால் அதிர்ச்சியில் உறைந்த பூர்ணிமா எழுந்து பேசும்பொழுது பேச முடியாமல் தொண்டை அடைப்பதாக கூறுகிறார். அப்போது அந்த அடைப்பை எடுத்து விடுவோம் என்று கமல் கூறும் பொழுது கைதட்டல்களால் அரங்கம் அதிர்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment