விஜய் ஆண்டனியின் மகள் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துக்கத்தில் லியோ பட தயாரிப்பு நிறுவனமும் பங்கேற்க இருப்பதால் இன்று வெளியாக இருந்த படத்தின் போஸ்டர் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஓமாந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். ஒரு வருட காலமாக மன உளைச்சலில் இருந்துள்ளதாகவும், அதற்காக அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றும், தற்கொலை செய்துதான் தற்போது அவர் இறந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.

தொடர்ந்து மகளின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்த விஜய் ஆண்டனி அவரது இறுதிச் சடங்குக்காக வீட்டில் வைத்திருக்கிறார். திரை பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குஷ்பூ, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், ரித்திகா சிங் போன்ற பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் இறப்பு குறித்து லியோ படக் குழுவினர் ட்வீட் ஒன்றை போட்டுள்ளனர். லியோ படம் பற்றி புதிய போஸ்டர் ஒன்று வெளியாகும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தனர். ஆனால் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டதால் போஸ்டர் நாளை வெளியாகும் என்று படத்தைதயாரித்த செவன் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிரகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உங்களுடைய தாங்க முடியாத இழப்பிற்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம், எங்களுடைய பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுடனும், உங்கள் குடும்பத்துடன் இருக்கும். லியோவின் போஸ்டரை நாளை வெளியிடுவது தான் சரியானதாகவும் மரியாதையாகவும் இருக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம். எனவே போஸ்டர் நாளை வெளியாகும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.