தளபதி 67 படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த புகைப்படத்தை தளபதி இயக்குனர் லோகேஷ் கனகராஜே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் தான் தளபதி 67. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலே விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருந்தனர். இந்த படத்தை 7 கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை திரிஷா நடிக்க இருக்கிறார். இவர்களுடன் சேர்த்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், நடிகை பிரியா ஆனந்த், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் லோகேஷ் கனகராஜின் ஃபேவரைட் நடிகரான மன்சூர் அலிகான் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் படங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே குட்டி டீசருடன் டைட்டிலை அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதுபோல தற்போது கடந்த வாரம் தளபதி 67 படத்தின் பெயரை “லியோ” என்று அறிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அந்த படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு காஷ்மீருக்கு சென்று இருக்கிறார்கள். காஷ்மீருக்கு சென்ற மூன்றாவது நாளே நடிகை திரிஷா சென்னைக்கு திரும்பியிருந்ததார். இதனால் அவர் படத்தில் இருந்து விலகி விட்டதாக இணையத்தில் வதந்திகள் கிளம்பி இருந்தது. ஆனால் அவர் மீண்டும் காஷ்மீருக்கு செல்வது போன்ற விமானத்திலிருந்து வீடியோவை எடுத்து வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் படத்திலிருந்து ஏதாவது அப்டேட்டுகள் கிடைக்குமா என்று விஜய் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் புகைப்படத்தில் காஷ்மீர் குளிரில் அனைவரும் ஸ்வெட்டர்கள் மற்றும் ஜெர்கின்கள் அணிந்து கொண்டு நிற்கின்றனர். கேம்ப் ஃபயர் என்று சொல்லப்படும் நெருப்பு முன்பு நின்று அனைவரும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் தளபதி விஜய் உடன் சேர்த்து மேத்யூ, லோகேஷ் கனகராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர். பதிவிட்ட சில நிமிடங்களில் பல்லாயிரக்கணக்கானலை குறித்து இருக்கிறது இந்த புகைப்படம். லியோ படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.