Categories: சினிமா

அதிரடி சரவெடி.! மரண மாஸ் சம்பவம்.! தளபதியின் “லியோ” ட்ரைலர் வெளியானது.! வீடியோ உள்ளே.!

வெளியிட்டது

இன்று நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ‘லியோ’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. தளபதியின் 67வது படமான இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் பொழுது இது கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் அடுத்த ஒரு மைல் கல்லாக அமையும் என்று தெரிகிறது. தமிழில் மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம் ஆகிய நான்கு படங்களை மட்டுமே எடுத்து நான்கையுமே வெற்றிப் படங்களாக மாற்றிக் காட்டியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக தளபதி விஜயுடன் இணைந்து அவரின் 67வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி சரவெடி.! மரண மாஸ் சம்பவம்.! தளபதியின் "லியோ" ட்ரைலர் வெளியானது.! வீடியோ உள்ளே.! 1
இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜயுடன் நடிகை திரிஷா கரம் கோர்த்திருந்தார். திரிஷாவிற்கும் இது 67வது திரைப்படம் ஆகும். மேலும் இவர்களுடன் சஞ்சய்தத்,கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மாத இறுதியில் நடைபெறும் என்று அறிவித்து அதற்கான பணிகளும் தொடங்கப்பட்ட நிலையில், அதிக அளவிலான டிக்கெட் கோரிக்கை வந்ததால் ஆடியோ லாஞ்சை ரத்து செய்வதாக தயாரித்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. எனினும் தொடர்ந்து படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் கூறியிருந்தனர். அந்த வகையில் தற்போது ட்ரைலர் இன்று(அக்.5) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


காலை முதலே ட்ரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஏங்கி காத்திருந்த நிலையில், தற்போது ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் 6:30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியிருந்தனர். அவர்கள் அறிவித்தபடியே, தற்போது ட்ரைலர் வெளியாகி உள்ளது. மரண மாஸாக இருக்கும் அந்த ட்ரைலரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்