மீனாவின் தங்கையை தனது தம்பிக்கு பெண் கேட்டு சென்ற முத்து.! தரமான ப்ரோமோ.!

சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ரவிக்கு மீனாவின் தங்கை சீதாவை பெண் கேட்டு முத்து சென்றிருக்கிறார். இந்த விஷயத்தை மீனா விடம் சொல்லாமலேயே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதனால் தற்போது அடுத்த பரபரப்பு எழுந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்களின் மனம் கவர்ந்த சீரியல் ஆக இருந்து வருகிறது. வெளியான சில நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து அசத்தியிருந்தது இந்த சீரியல். தற்போது கதைப்படி முத்துவின் கடைசி தம்பியாக இருக்கும் ரவிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதில் பல குழப்பங்கள் நடந்து முடிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனாவின் தங்கையை தனது தம்பிக்கு பெண் கேட்டு சென்ற முத்து.! தரமான ப்ரோமோ.! 1
ரவி காதலித்து வரும் ஸ்ருதியின் தந்தைக்கும், ரவியின் தந்தை அண்ணாமலைக்கும் ஏற்கனவே பழைய பகை இருந்து வருகிறது. இதனால் ஸ்ருதியை ரவிக்கு திருமணம் செய்து வைப்பதில் முத்துவிற்கும் உடன்பாடு இல்லை. மேலும் ரவிக்கு தாயார் விஜயா பார்த்திருந்த பெண்ணுடன் நிச்சயம் நின்று போனது. இப்படி பல குழப்பங்கள் நடந்து வரும் நிலையில் முத்து திடீரென ஒரு முடிவெடுக்கிறார். அதில் மீனாவை அழைத்துக் கொண்டு மீனாவின் வீட்டிற்கு காரில் செல்கிறார். அப்போது மீனா எங்கே போகிறோம் என்று சொல்லாமலேயே என்னை கூட்டிக்கொண்டு போகிறீர்களே? எங்கே போகிறோம்? என்று கேட்க, மீனாவின் வீட்டிற்கு வந்து காரை நிறுத்துகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நடிகர் தனுஷ் எழுதி, இயக்கி இருக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

மீனாவின் தங்கையை தனது தம்பிக்கு பெண் கேட்டு சென்ற முத்து.! தரமான ப்ரோமோ.! 3
பின்னர் உள்ளே சென்ற முத்து, மீனாவின் தாயாரிடம் தாம்பூலத்தை எடுத்து வரச் செய்து பழங்களை எல்லாம் அதில் நிரப்பி உங்கள் மகள் சீதாவை ரவிக்கு பெண் கொடுங்கள் அத்தை என்று கேட்கிறார். இதனால் மீனாவும் அவரது தாயாரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். இனி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment