ஈஸ்வரி பற்றி ஆதி குணசேகரனிடம் போட்டு கொடுத்த கதிர்.! கோபத்தின் உச்சியில் ஆதி குணசேகரன்.!

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் தற்போது ஜனனி ஆதி குணசேகரனை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறார். எப்போதுதான் நீங்கள் எல்லாம் திருந்த போகிறீர்களோ? என்று அவரைப் பார்த்து கேட்க, ஆதி குணசேகரன் ஜனனி மீது கடுப்பில் இருக்கிறார். பின்னர் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் ஆதி குணசேகர்களிடம் ஈஸ்வரி பற்றி கதிர் போட்டு கொடுக்கிறார். இதனால் ஆதி குணசேகரன் கோபத்தில் உச்சிக்கே செல்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடிகர் வேலராமமூர்த்தி என்ட்ரி கொடுத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரி பற்றி ஆதி குணசேகரனிடம் போட்டு கொடுத்த கதிர்.! கோபத்தின் உச்சியில் ஆதி குணசேகரன்.! 1

விளம்பரம்

மறுபுறம் வீட்டில் உள்ள மருமகள்களிடம் விசாலாட்சி, “மூத்தவன் வந்து விடுவான், அதற்குள் நீங்கள் எல்லாம் போய் அலங்காரம் பண்ணி விட்டு வெளியே வாங்க” என்று கூறுகிறார். அதற்கு பதில் அளித்த நந்தினி, “நாங்கள் எதற்கு அலங்காரம் செய்ய வேண்டும்? எங்களை என்ன பொண்ணு பார்க்கவா வராங்க? என்று கேட்கிறார். பின்னர் வண்டியில் வந்து கொண்டிருக்கும் குணசேகரனிடம் கதிர், அன்றைக்கு என்ன நடந்தது என தெரியுமா என சொல்லி, ஈஸ்வரி பற்றி கூறுகிறார். இதைப் பற்றி கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார் ஆதி குணசேகரன். அப்படியாக இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஆதி குணசேகரனாக யார் நடித்தாலும் மாரிமுத்துவின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஈஸ்வரி பற்றி ஆதி குணசேகரனிடம் போட்டு கொடுத்த கதிர்.! கோபத்தின் உச்சியில் ஆதி குணசேகரன்.! 3

தொடர்புடையவை  ஒன்றாக இணைந்து பார்ட்டி செய்து வார இறுதி நாளை கொண்டாடிய 'எதிர்நீச்சல்' நடிகர்கள்..!

குறிப்பாக மாரிமுத்துவின் குரல் ஏற்ற இறக்கம், அவரது கோபம், தொண்டை கனைப்பு போன்றவற்றை முதல் நாளே வேல ராமமூர்த்தி பூர்த்தி செய்யவில்லை என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment