Categories: சினிமா

நடிகர் அஜித்குமாரிடம் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் ” – மலையாள நடிகர் பிருத்விராஜ்!!

வெளியிட்டது
நடிகர் அஜித்குமாரிடம் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் ” - மலையாள நடிகர் பிருத்விராஜ்!! 1

மலையாள நடிகர் பிருத்விராஜ் பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் படம் மூலம் டைரக்டராக அறிமுகமானார். லால் ஜூனியர் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள டிரைவிங் லைசன்ஸ் மலையாள படம் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், தனது ரசிகர்களுடன் பிருத்விராஜ் கலந்துரையாடினார். அந்த சமயத்தில் ஒரு ரசிகர் அஜித்குமார் பற்றி கேள்வி எழுப்ப அதற்கு பிருத்விராஜ் பதில் அளிக்கையில்,

“அஜித்குமார் என்னை விட பெரிய நடிகர். என்னுடைய வாழ்க்கையில் சிறந்த பாடத்தை அவரிடம் இருந்தே கற்று உணர்ந்தேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா புதிய வீட்டில் குடிபெயர்ந்து சென்றார். கிரகப்பிரவேசத்திற்கு என்னையும் அழைத்து இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு அஜித், கார்த்தி, மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது அஜித்தும் நானும் நீண்ட நேரம் பேசினோம். அந்த உரையாடலில் இருந்து அஜித்குமார் வெற்றி தோல்வியில் இருந்து விலகி இருப்பவர் என்று அறிந்து கொண்டேன். அவரது படம் பெரிய வெற்றி பெற்றாலும் சந்தோஷம் இருக்காது. தோல்வி அடைந்தாலும் வருத்தப்படமாட்டார்.

இதைத்தான் எனது வாழ்க்கையில் நான் பின்பற்றுகிறேன். நாம் வெற்றியில் தலை கால் புரியாமல் ஆடுவோம் தோல்வியில் சங்கடப்படுவோம். இரண்டிலும் சிக்காமல் விலகி இருப்பதை அஜித்திடம் இருந்து கற்றுக் கொண்டேன்.” இவ்வாறு பிருத்விராஜ் கூறினார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்