Categories: சினிமா

குவிந்த நெகடிவ் விமர்சனங்களால் வசூலை கோடிகளில் வாரி குவித்த விஜய் தேவாரகொண்டா படம்.!

வெளியிட்டது

பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூலை குவிக்கும் படங்கள் ஒரு பக்கம் என்றால், நெகட்டிவ் விமர்சனங்களால் வசூலை குவிக்கும் படங்கள் இன்னொரு பக்கம். அந்த வகையில் நேற்று வெளியாகிய முழுவதும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள ஒரு படம்தான் லைகர் இந்த படத்தை பார்த்த பலரும் வெளியில் வந்து இந்த படத்தை திட்டி தீர்த்து விட்டனர் படம் சுத்தமாக நன்றாகவே இல்லை பலரும் விமர்சித்தனர். பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவாரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் நேற்று ரிலீஸ் ஆனது. விருமன், திருச்சிற்றம்பலம் போன்ற தமிழ் படங்களே 8 மணிக்கு தான் வெளியான நிலையில் விஜய் தேவாரகொண்டாவின் படம் காலை 4 மணிக்கே திரையரங்குகளில் வெளியானது.

குவிந்த நெகடிவ் விமர்சனங்களால் வசூலை கோடிகளில் வாரி குவித்த விஜய் தேவாரகொண்டா படம்.! 1

இந்த படத்தில் இருந்து பாதியிலேயே பலரும் எழுந்து ஓடத் தொடங்கினர். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியான இந்த படம் எடுத்த எடுப்பிலேயே மோசமான விமர்சனத்தைப் பெற்றது. மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொள்ள நினைக்கும் ஹீரோ ஒரு குருவிடம் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு மைக் டைசனை ஒரே அடியில் வீழ்த்துவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் உங்களுக்கு கொஞ்சம் ஓவராக இல்லையா? என்று படத்தை கடுமையாக விமர்சித்தனர். மேலும் படம் ஓடிக் கொண்டிருந்தபோதே பாதியில் எழுந்து அனைவரும் வெளியேறி சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் நெகட்டிவ் விமர்சனங்களால் முதல் நாள் காட்சி நல்ல வசூலை பெற்றுள்ளது.

இதை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மோசமான விமர்சனங்களால் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் 33.12 கோடி வசுலை குவித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் 14 கோடியையும், ஹிந்தி ரீமேக் 5 கோடிக்கு மேலும், பிற இடங்களிலும் சேர்த்து மொத்தம் 33 கோடி வசூலை குவித்து இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்