தமிழின் முன்னணி நாயகனாக இருப்பவர் தனுஷ். இவ்வாறு பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜா அவர்களின் இளைய மகனாவர். ஆரம்பத்தில் இவர் திரைத்துறைக்கு வந்தபோது பல அவமானங்களை சந்தித்து இருந்த போதிலும் தற்போது அவர் மிகப்பெரிய நடிகராக உயர்ந்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் தன்னுடைய அயராத உழைப்பும் நேர்த்தியான நடிக்கும் திறமையும்தான். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது ஹாலிவுட் படமான தி க்ரேமேன் வரை நடித்து முடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வெளியான 8 நாட்களில் 50 கோடி வசூலை பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவரும் இவரது மனைவி ஐஸ்வர்யாவும் தங்களது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பை அவர்கள் ஜனவரி மாதம் வெளியிட்டிருந்தனர். கடந்த எட்டு மாதங்களாக அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவோ, பார்த்துக் கொள்ளவோ, பேசிக் கொள்ளவோ இல்லை. ஆனால் தனது மகன்களை மட்டும் தனுசுடன் வெளிநாடு வரை அனுப்பி வைத்து இருந்தார் ஐஸ்வர்யா.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. அதில் தனுஷ், ஐஸ்வர்யா அவர்களது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் ஒரே புகைப்படத்தில் இருந்தனர். இதன் பின்னணியை விசாரித்த போது தனுஷின் மூத்த மகன் யாத்திரா தன்னுடைய பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவி ஏற்று இருந்தார். இந்த விழாவிற்காக இருவரும் அவரது பள்ளிக்கு ஒன்றாக சென்றிருந்தனர். தற்போது யாத்ரா உறுதிமொழி எடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Video below..
YouTube Video Code Embed Credits: Indiaglitz