அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் “தி வாரியர்” படத்திற்கு ப்ரோமோஷன் வேலைகள் பல வகையிலும் முடக்கி விடப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, நாயகி க்ரித்தி ஷெட்டி, ஆதி என பலர் நடித்துள்ள இந்த படம் வருகிற ஜூலை 17ஆம் தேதி தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. கொஞ்சம் கொஞ்சம் தென்னிந்தியாவில் தயாராகும் படங்கள் அனைத்தும் மற்ற மொழிகளில் நேரடியாக வெளியாகி கொண்டிருக்கிறன. குறிப்பாக தெலுங்கு நாயகர்கள் பலரும் தங்கள் மொழியை தாண்டி மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளன. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ராம் இந்த படத்தில் தமிழின் பிரபல இயக்குனர் லிங்குசாமியுடன் இணைந்து படம் நடித்து வருகிறார். இயக்குனர் லிங்குசாமி கடைசியாக இயக்கிய “அஞ்சான்” படம் சூர்யாவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி மிக பெரிய தோல்வியை அடைந்தது. அந்த படத்தில் அடைத்த தோல்வியை சரிசெய்து மிக பெரிய வெற்றியை பதிவு செய்ய காத்துள்ளார் லிங்குசாமி.
படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான நடிகர் சிம்பு பாடிய “புல்லட் சாங்” மிக பெரிய வெற்றியை பெற்றது. சிம்புவின் துள்ளலான குரல், சிறப்பான இசை என்பதை தாண்டி நாயகி க்ரித்தி ஷெட்டியின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி அதை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் “தி வாரியர்” படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் ராம் பொத்தினேனி, இயக்குனர் லிங்குசாமி, எஸ்.ஜே. சூர்யா,பாரதிராஜா, பார்த்திபன் என பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய இயக்குனர் லிங்குசாமி கொஞ்சம் நெகிழ்ந்து போனார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான “அஞ்சான் மற்றும் சண்டக்கோழி 2” இரண்டு படங்களுமே தோல்வியை தழுவின.
இந்நிலையில் மேடையில் பேசிய லிங்குசாமி, திடீரென கண்கலங்கினார். இதையடுத்து படத்தின் ஹீரோ ராம் பொத்தனேனி அவருக்கு தண்ணீர் கொடுத்து தேற்றினார். சிறுது நேரம் கழித்து பேசிய அவர், நான் சென்னைக்கு வந்த பொது கையில் எதுவும் இல்லாமல் வந்தேன். ஆனால் இப்பொது நிறைய மனிதர்கள் கிடைத்துள்ளார்கள். நான் சில படங்களால் பணம், காசு, கார் என நிறைய இழந்துள்ளேன், ஆனால் ஒரு போதும் இந்த மனிதர்களை இழக்க விரும்பவில்லை. அந்த வீடியோ நீங்களும் காண….
Video Courtesy- Shruthi Tv