படம் வேற லெவெல்ல இருக்கு.! goosebumps ஆ இருக்கு.! சர்தார் படம் பற்றி பொதுமக்கள் கருத்து

நடிகர் கார்த்திக் நடித்துள்ள சர்தார் திரைப்படம் தற்போது தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் கடைசியாக நடித்த படம் விருமன். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கார்த்திக் பொன்னியின் செல்வன் படத்திலும் வந்திய தேவனாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் வெளியானதற்கு பிறகு கார்த்திக்குக்கு ரசிகர் கூட்டம் பெருகி உள்ளது. இந்த நிலையில் கார்த்திக்கு அடுத்ததாக நடித்து முடித்துள்ள படம் தான் சர்தார். இந்த படம் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டிருக்கிறது. இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ் மித்ரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராஷி கண்ணா, சிம்ரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரெய்லர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் வேற லெவெல்ல இருக்கு.! goosebumps ஆ இருக்கு.! சர்தார் படம் பற்றி பொதுமக்கள் கருத்து 1

விளம்பரம்

இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ் லட்சுமணன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் கார்த்திக் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் நடிகை லைலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலமாக மீண்டும் திரைத்துறைக்கு திரும்புகிறார். இந்தப் படத்தில் சிம்ரன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

தொடர்புடையவை  இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சன் டிவி 'சந்திரலேகா' சீரியல் நடிகை ஸ்வேதா.!

படம் வேற லெவெல்ல இருக்கு.! goosebumps ஆ இருக்கு.! சர்தார் படம் பற்றி பொதுமக்கள் கருத்து 3

விளம்பரம்

இந்த படம் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்துடன் மோதும் விதமாக இன்று திரையில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த படம் பற்றி பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below video.! 

விளம்பரம்

Youtube video code embed credits: Chennai Day

விளம்பரம்

Leave a Comment