Categories: சினிமா

பொன்னியின் செல்வன்படப்பிடிப்பு தள புகைப்படங்கள்!

தமிழில் உருவாகும் பிரமாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதற்கட்ட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ரியாஸ் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமரர் கல்கியின் எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்படும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போது இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு தளம் குறித்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்