“ஜாஃபர் வீட்ல அவன் தான் ஹீரோ”!!”ரிவியூ பண்றேன்னு தப்பு தப்பா தான் பேசிட்டு இருக்காங்க”!!மோசமான ரிவியூவர்சுக்கு பளார் பதில் கொடுத்த லோகேஷ்!!!

வெளியிட்டது

இப்பொது தமிழகமெங்கும் கேட்கும் ஒரு படத்தின் பெயர் என்றால் அது “விக்ரம்” படமே. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா ஆகியோரின் வெறித்தனமான நடிப்பும், அனிருத்தின் பின்னி பெடலெடுக்கும் பின்னனி இசையும், நேர்த்தியான கதை அமைப்பையும் மக்கள் பாராட்டி, கொண்டாடி வருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி படம் 2 தெலுங்கு தேசங்கள் மற்றும் மலையாள கன்னட மொழிகளிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது. video given below

"ஜாஃபர் வீட்ல அவன் தான் ஹீரோ"!!"ரிவியூ பண்றேன்னு தப்பு தப்பா தான் பேசிட்டு இருக்காங்க"!!மோசமான ரிவியூவர்சுக்கு பளார் பதில் கொடுத்த லோகேஷ்!!! 1

இதற்கெல்லாம் முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். எந்த வித சினிமா பின்புலமும் இன்றி, யாரிடமும் கற்றுக்கொள்ளாமல், கமல்ஹாசனின் படம் மட்டுமே பார்த்து சினிமாவை கற்று கொண்ட இந்த வெறித்தனமான ரசிகன் நடிகர் கமலிற்கு நீண்ட காலங்களாக தப்பிப்போய் கொண்டிருந்த மிக பெரிய வெற்றியை திருப்பி கொடுத்துள்ளார்.

அறிமுகமான மாநகரம் படம் முதல் இப்போது வெளியாகியுள்ள விக்ரம் வரை 4 படங்களுமே சிறந்த கதையமைப்பிற்காக மிகவும் பாராட்டப்பட்டவை. குறிப்பாக கைதி படம், மிக பெரிய வகையில் ரசிகர்களை கவர்ந்து யார் இந்த லோகேஷ் என பார்க்கும் அளவிற்கு திருப்பியது. கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு கன்னட மற்றும் மலையாள படங்கள் இந்திய அளவில் மிக பெரிய பெயரை பெற்று வரும் நிலையில், தமிழில் அது போன்ற படங்களை கொடுக்க ஒரு இயக்குனர் கூட இல்லையா? என பலரது கேள்விக்கும் சாட்டை அடிகொடுத்துளளார் லோகேஷ்.

தமிழ் திரையுலகை அண்மை காலங்களில் இங்குள்ள ஊடகத்தினரே கலாய்த்து வந்த நிலையில், நம்ம ஊரில் கூட பான் இந்திய படம் எடுக்கும் திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்பதை அவர் நிரூபித்து காட்டியுள்ளார். நடிகர் கமலின் ரசிகராக இருந்து இப்பொது அவருக்கு மிகவும் பிடித்து போன இளம் இயக்குனராக லோகேஷ் மாறியுள்ளார். இந்நிலையில் படம் இப்பொது தமிழில் வெளியான ஒரு படம் எடுத்துள்ள அதிகபட்ச காலெக்ஷனை அள்ளியுள்ளதால், லோகேஷின் அடுத்த படம் குறித்த எதிர்ப்பரப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் படத்தை ரிவியூ செய்த யூடூப் ப்ளூ சட்டை மாறனும், “பிலிப் பிலிப்” ஊடகத்தினரும் படத்திற்கு மிகவும் எதிர்மறையான கருத்துக்களை சொன்னதை தாண்டி மிகவும் கொச்சையாக பேசினார்கள். குறிப்பாக குள்ளமாக இருக்கும் ஜாபாரை கீழ்த்தரமாக பேசி பதிவிட்டனர். இது சோசியல் மீடியாவில் மிகவும் எதிர்ப்புகளை கொடுத்தது.

இப்பொது அது குறித்து பேசியுள்ள லோகேஷ், “அவுங்க ரிவியூ பண்றேன்னு ரொம்பவே கீழ்தரமா பேசிட்டு இருகாங்க..அவுங்களே திருந்தன தான் உண்டு” என பதில் அளித்துள்ளார். அடுத்து இயக்குனர் லோகேஷ் “மாஸ்டர்” படத்தில் இயக்கிய விஜயுடன் மீண்டும் இணைய உள்ளார். இதில் விஜய் போலீசாக நடிக்க இருப்பதாகவும், அவருடன் முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Video Courtesy – IndiaGlitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்