“பிரபலங்கள் வாழ்த்து மழையில் விஜய்”!! 48வது பிறந்தநாளில் விஜய்க்கு குவியும் பாராட்டுகள்!!

இப்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். கோடிகளில் சம்பளம் என்பதை விட, வசூலிலும் தொடர்ந்து அவருடைய படங்கள் ஆசாத்திய சாதனைகள் செய்து வருகின்றன. 1992ஆம் ஆண்டு தந்தையின் இயக்கத்தில் “நாளைய தீர்ப்பு” படத்தில் நாயகனாக அறிமுகமான விஜய், கொஞ்ச காலம் நிலையான வெற்றிக்காக காத்திருந்த விஜய்க்கு இயக்குனர் விக்ரமன் “பூவே உனக்காக” படம் மூலம் இளம் நடிகர் ஒருவருக்கு இப்போதும் கனவாக இருக்கும் மிக பெரிய வெற்றியை 1997ஆம் ஆண்டே கொடுத்தார்.

"பிரபலங்கள் வாழ்த்து மழையில் விஜய்"!! 48வது பிறந்தநாளில் விஜய்க்கு குவியும் பாராட்டுகள்!! 1

விளம்பரம்

அந்த படத்தின் வெற்றியை போலவே அடுத்தடுத்து குடும்பங்களை கவரும் விதமான வெற்றி படங்களை கொடுத்தார் விஜய். லவ் டுடே, காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், குஷி, ப்ரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், பத்ரி, ஃப்ரெண்ட்ஸ், சச்சின் என தொடர் வெற்றி கொடுத்து வந்த விஜய், ஆக்ஷன் ஹீரோவாக மாற முயன்ற “கில்லி” படம் மாபெரும் வெற்றியை அவருக்கு கொடுத்தது. அது முதலே ஆக்ஷன், காதல், குடும்ப படங்களை கொடுத்து வரும் விஜய் போக்கிரி, வேட்டைக்காரன், காவலன், நண்பன், துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், மாஸ்டர் என வரிசைக்கட்டி குடும்பங்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் படம் நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  கோலாகலமாக நடைபெற்ற இந்திரஜா ரோபோ சங்கர் வளைகாப்பு..! தாத்தாவாகும் குஷியில் ரோபோ சங்கர்..!

"பிரபலங்கள் வாழ்த்து மழையில் விஜய்"!! 48வது பிறந்தநாளில் விஜய்க்கு குவியும் பாராட்டுகள்!! 3

விளம்பரம்

முன்னர் ரஜினி மட்டுமே தமிழ் சினிமாவின் மிக பெரிய வசூலை தமிழ்நாட்டை தாண்டி ஈட்டி வந்த நிலையில் அதையும் விஜய் முறியடிக்க துவங்கினர். அண்மையகாலங்களில் மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் விஜயின் படங்கள் பெரும் வசூல் குவித்து வருகின்றன. தென் இந்தியாவிலுள்ள தமிழகம், கேரளம், ஆந்திரம் என மூன்று மாநிலங்களிலும் விஜயின் படங்கள் சில ஆண்டுகளாகவே வசூல் குவிக்க துவங்கியுள்ளன.

"பிரபலங்கள் வாழ்த்து மழையில் விஜய்"!! 48வது பிறந்தநாளில் விஜய்க்கு குவியும் பாராட்டுகள்!! 5"பிரபலங்கள் வாழ்த்து மழையில் விஜய்"!! 48வது பிறந்தநாளில் விஜய்க்கு குவியும் பாராட்டுகள்!! 7

விளம்பரம்

குறிப்பாக கேரளாவில் தமிழகம் போலவே மிக பெரிய ரசிகர் கூட்டம் சேர்த்து வைத்துள்ளார் விஜய். இவருடைய படங்களுக்கு வழி விட்டு, சில மலையாள முன்னணி நடிகர்களே தங்களுடைய படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த செய்திகள் பல உள்ளன. இப்பொது ஆந்திராவிலும் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட அவர் அங்குள்ள முக்கிய சினிமா நபர்களை ஒன்றிணைத்து “வாரிசு” படம் நடித்து வருகிறார்.

"பிரபலங்கள் வாழ்த்து மழையில் விஜய்"!! 48வது பிறந்தநாளில் விஜய்க்கு குவியும் பாராட்டுகள்!! 9

விளம்பரம்

இன்று தன்னுடைய 48வது பிறந்தநாளை கொண்டாடி வரும் விஜய்க்கு பல்வேறு ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துவருகிறார்கள். அடுத்தடுத்து வெளியான வாரிசு படத்தின் 2 போஸ்டர்களும் மிக பெரிய அளவில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடையவை  ஜனவரி 12 இல்ல.! முன்கூட்டியே வெளியாகிறது துணிவு.! அதிகாரபூர்வமாக அறிவித்த போனி கபூர்.!

"பிரபலங்கள் வாழ்த்து மழையில் விஜய்"!! 48வது பிறந்தநாளில் விஜய்க்கு குவியும் பாராட்டுகள்!! 11"பிரபலங்கள் வாழ்த்து மழையில் விஜய்"!! 48வது பிறந்தநாளில் விஜய்க்கு குவியும் பாராட்டுகள்!! 13

விளம்பரம்

"பிரபலங்கள் வாழ்த்து மழையில் விஜய்"!! 48வது பிறந்தநாளில் விஜய்க்கு குவியும் பாராட்டுகள்!! 15   "பிரபலங்கள் வாழ்த்து மழையில் விஜய்"!! 48வது பிறந்தநாளில் விஜய்க்கு குவியும் பாராட்டுகள்!! 17

விளம்பரம்

Leave a Comment