முதல்வன் பட மனிஷா கொய்ராலா போல மாறிய லாஸ்லியா.! பாவாடை தாவணியில் சொக்க வைக்குறாங்களே.!

வெளியிட்டது

பிக்பாஸ் லாஸ்லியா தற்போது முதல்வன் படத்தில் வரும் மனிஷா கொய்ராலா போல உடை அணிந்து ரீல்ஸ் செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லாஸ்லியா மரியநேசன். இலங்கை தமிழரான இவர் அங்குள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர். திடீரென விஜய் டிவியின் அழைப்பு வரவே பிக்பாஸ்ஸில் கலந்து கொண்டு தமிழக மக்களுக்கும் பரிட்சயம் ஆனார். நடிகர் கவினுடன் காதல், தந்தை வந்த பிறகு நடந்த அமர்க்களங்கள் என பல்வேறு வகையிலும் ரசிகர்கள் இவரை இன்னமும் ஞாபகம் வைத்து கொள்ளும் அளவிற்கு நன்றாகவே போட்டியில் பங்கெடுத்தார். அந்த போட்டியில் இருந்து வெளியேறி நடிகர் கவினுடன் காதல் மோதலை ஆங்காங்கே வெளிப்படுத்தி வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

முதல்வன் பட மனிஷா கொய்ராலா போல மாறிய லாஸ்லியா.! பாவாடை தாவணியில் சொக்க வைக்குறாங்களே.! 1

அந்த பிரச்சனை எல்லாம் முடிந்து, நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினர். அதற்காக தன்னுடைய உடலை உடற்பயிற்சி மூலம் பெருமளவு குறைத்து இப்பொது ஃபிட்டாக வலம் வருகிறார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவருக்கு அதில் பின் தொடர்பவர்களும் அதிகம். அவ்வப்போது எதாவது ஒரு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும், உடற்பயிற்சி செய்யும் படங்களையும் வெளியிட்டு வருகிறார். பிக் பாஸ்ஸில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளரான தர்ஷனுடன் சமீபத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்து தயாரித்த “கூகிள் குட்டப்பன்” என்ற படத்தில் நாயகியை தோன்றினர். படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு போகவில்லை.

என்றாலும் விடாமல் தன்னுடைய நடிப்பு ஆர்வத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் முதல்வன் படத்தில் வரும் மனிஷா கொய்ராலா போல உடை அணிந்து ரீல்ஸ் செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பல லட்சம் மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Video Below..! 

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்